600 அடி குழிக்குள் தவறி விழுந்த சிறுமியின் மீட்புப் பணி புகைப்படம் இணைப்பு.

கரூர் மாவட்டம், துரியம்பாளையம் அருகே 600 அடி கொண்ட போர்வெல் குழியில் தவறி விழுந்த சிறுமியை மீட்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட துரியம்பாளையம் அருகே உள்ள பாதிரிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டியன். தனியார் நிலத்தை குத்தகைக்கு எடுத்து வந்து விவசாயம் செய்து வருகிறார்.

பள்ளிக்கு இன்று விடுமுறை என்பதால் தனது 7 வயது மகள் முத்துலெட்சுமியை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள தோட்டத்தி்ல் முருங்கை காய் பறிக்க சென்றுள்ளார் முத்துப்பாண்டியன்.

அப்போது, அந்த தோட்டத்தில் போடப்பட்டிருந்த 600 அடி போர்வெல் குழியில் சிறுமி முத்துலெட்சுமி தவறி விழுந்து விட்டாள். 12 அடி ஆழத்தில் மகள் சிக்கி தவிப்பதை பார்த்து அலறி துடித்த பாண்டியன், இது குறி்த்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, காவல்துறையினர், தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் இரண்டு பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டது. மேலும் 108 ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மருத்துவர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.

இதையடுத்து, சிறுமி விழுந்த ஆழ்துளை குழியின் அருகில் அதிவேக சக்தி கொண்ட இரண்டு பொக்லைன் எந்திரங்கள் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. இரண்டு அடி பள்ளம் தோண்டுவதற்குள் பாறை இருந்ததால் தோண்ட முடியவில்லை. 

இதைத் தொடர்ந்து, துளையிடும் மிஷின் மூலம் பள்ளம் எடுக்கப்பட்டு வருகிறது. சிறுமியின் சுவாசத்துக்கு ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டுள்ளது. சேலையை பிடித்தபடி 12 ஆழத்தில் உள்ள சிறுமி அந்தரத்தில் இருக்கிறாள்.

முதலில் தந்தையுடன் பேசிக் கொண்டிருந்த சிறுமி, தற்போது மயக்கம் அடைந்து விட்டதாக தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காலை 7 மணிக்கு குழியில் சிறுமி முத்துலெட்சுமி விழுந்துள்ளாள். 7 மணி நேரம் ஆகியும் சிறுமி இன்னும் மீட்கப்படவில்லை. மீட்பு பணி தாமதத்துக்கு பாறைகளே காரணம் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இருந்தாலும் இன்னும் 3 மணி நேரத்தில் சிறுமியை மீட்டு விடுவோம் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

இதனிடையே, சம்பவ இடத்தை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டார்.
 






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :