புத்தளம் பாடசாலை மாணவன் மீது தாக்குதல் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.


(அபூ இல்மா)
புத்தளம் கண்டக்குழி முஸ்லிம் மகா வித்தியாலத்தில் கல்வி பயிலும் பாரூக் அசாம்(தரம்-09) மாணவன் பாடசாலையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது பாடசாலை சீருடையுடன் கடத்தப்பட்டு ஆள் நடமாட்டம் அற்ற ஒழுங்கைக்குள் கொண்டு செல்லப்பட்டு சேகப்துல்காதர் சகாப்தீன் என்பவராலும் ,(51 வயது),அவரது மகன் சகாப்தீன் பௌசான் என்பவராலும் கடுமையாகத்தாக்கப்பட்டு முள்கம்பி வேலியில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் ஓன்று.(04.04.2013) நடை பெற்றுள்ளது தாக்குதல் நடாத்தியோரும் தாக்கப்பட்டவரும் கண்டக்குழி முசலி மீள்குடியேற்றக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

இதனால் பாதிக்கப்பட்ட அசாம் இரண்டு நாட்கள் கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.மேலும் சம்பவம் பற்றித் தெரியவருவதாவது சாகாப்தீன் என்பவரின் சிறிய மகன் அஸ்னிரும் அசாம் என்பவரும் சமவயதுக் குழுவைச் சேர்ந்தவரகள் இவர்கள்; இருவருக்கும் இடையில் இதே தினம் சிறு மோதல் ஒன்று இடம் பெற்றுள்ளது. சிறுவர்களிடையே இடம் பெறும் மோதல்களை சமரசம் செய்ய வேன்டிய பொறுப்பு பெரியவர்களிடம் உண்டு.உரிய சிறுவன் தந்தையிடம் அசாம் தன்னைத் தாக்கியதாகக் கூறியுள்ளார்.இதனைத் தொடர்ந்து தாக்குதல் நடந்துள்ளது.

சகாப்தீன் அஸ்னர் எனும் சிறுவனின் தலையில் ஏற்கனவே பெறல் விழுந்ததால் ஏற்பட்ட காயம் உண்டு. அதுமட்டுமன்றி பட்டாசுத்துகழ் புண்மூலமாக உடலில் உட்சென்ற பாதிப்பும் அவரிடம் உண்டு.பாரூக் அசாம் விடயத்தை பொலிசில் முறையிட்ட பின்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அறிந்த சகாப்தீன் என்பவர் தனது சுகவீனமான மகனை அழைத்துச்சென்று பெரிய ஒரு பொல்லையும் கொண்டு சென்று பொலிசாரிடம் காட்டி அசாம் தனது மகனை இதனால் தலையில் தாக்கியுள்ளார் என முறையிட்டுள்ளார்.அதன் பின்பு கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்து உள்ளார்.

பணபலம் படைத்த சேகப்துல் காதர் சாகாப்தீன் என்பவர் தனது செல்வாக்கைப்பயன்படுத்தி வைத்திய அதிகாரிகள்,பொலிசார் போன்றோரை பிழையாக திசைதிருப்பி தெட்டத் தெளிவாhன அநீதியை செய்துள்ளார்.அசாமை தாக்கிய சகாப்தீன் பௌசான் என்ற வாலிபர் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்படவும் இல்லை. சினிமாப் பாணியில் நடை பெற்ற இந்தில்லுமுல்லு மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும்.

அசாம் தடியால் அஸ்னிரைத் தாக்கியிருந்தால் அத்தடியில் எப்பகுதியிலாவது அசாமின் கைவிரல் அடையாளம் இருந்திருக்கும்.

அஸ்னிருக்கு இருந்த வியாதி வைத்தியருக்குத் தெரியாமல் இருக்க நியாயம் இல்லை.

ஏழைத்தொழிலாளியின் மகனான அசாம் பல பெண் சகோதரிகளுடன் பிறந்தவர். இவருக்கு தெட்டத் தெளிவாக அநீதி இளைக்கப்பட்டு விட்டதாக அப்பகுதிமக்கள் குறிப்பிடுகின்றனர்.

எமது கோரிக்கை கிழித்தெறியப்பட்ட அசாமின் பாடசாலைச் சீருடைக்குப் பதிலாக புதிய சீருடை வழங்கப்பட வேண்டியதுடன் அசாமின் உடல் நிலை முழுமையாகப் பரிசோதிக்கப்பட வேண்டும். ஏனெனில் வளர்ந்த இருவர் கடுமையாக தாக்கியுள்ளதால் உட்காயங்கள் ஏற்பட்டிருக்கலாம்.

மேலும் உரிய நட்டஈடும் வழங்கப்படவேண்டியதுடன் தாக்குதல் நடாத்திய தந்தையும், மகனும் கைதுசெய்யப்படவேண்டும். அசாம் என்ற மாணவன் அச்சுறுத்தலுக்குப் பயந்து பிரதேசத்தை விட்டுச்சென்று வேறு பாடசாலையில் சேரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதையும் அறிய முடிகிறது.

ஏழைகளின் தோழனான மஹிந்த ராஜபக்ச சனாதிபதி அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஒரு ஏழை மாணவனுக்கு நடைபெற்ற இவ் அநீதியை அவரின் கவனத்திற்குக் கொண்டு செல்ல சமூக நலன்விரும்பிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :