மின் கட்டண உயர்வுக்கு நான் காரணம் இல்லை -சம்பிக்க ரணவக்க


புதிய மின் கட்டண உயர்விற்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என முன்னாள் மின் வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

மின் கட்ண உயர்விற்கு காரணம் தான் என தற்போதைய மின் வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பாராளுமன்றில் உரை நிகழ்த்தியுள்ளதாகவும் அது ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

2013இல் மின் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என அமைச்சரவை பத்திரமோ, ஜனாதிபதியிடம் கோரிக்கையோ இலங்கை மின்சார சபையால் நான் அமைச்சராக இருந்தபோது முன்வைக்கப்படவில்லை.

அவ்வாறு எதுவும் நடைபெற்றிருந்தால் அதனை ஒப்பித்து காட்டுமாறு சவால் விடுக்கிறேன்.

2013 ஜனவரி 21ஆம் திகதி நிதி அமைச்சின் செயலாளர் மின் வலு எரி சக்தி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தின் கழிவு எண்ணெய் விலையை 65 ரூபாவிலிருந்து 90 ரூபாவாகவும் குறைந்த சல்பர் உடைய கழிவு எண்ணையை 75 ரூபாவிலிருந்து 100 ரூபாவாகவும் அதிகரித்திருந்தால் அதற்கு ஏற்றாட்போன்று மார்ச் தொடக்கம் மின் கட்டணத்தையும் உயர்த்த யோசனை தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர் பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு தமது அதிகாரத்தை பயன்படுத்தி மின் கட்டண உயர்விற்கு அனுமதி அளித்தது.

நிதி அமைச்சின் செயலாளருடைய யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதிக்கு நான் கடிதம் ஒன்றை எழுதியிருந்தேன்.

இருந்தும் மின் கட்டண உயர்வு செயற்படுத்தப்பட்டுள்ளமையை ஏற்றுக் கொள்ள முடியாது. மக்கள் விருப்பின்றி மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறு சம்பிக்க ரணவக்கவின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :