கிரிக்கெட் போட்டியின்போது ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் கொலை.


லவாக்கலை - வட்டகொட பகுதியில் கிரிக்கெட் போட்டியின்போது ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் கொலைசெய்யப்பட்டமை குறித்த விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

இரண்டு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலின்போதே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
மடகும்புர பகுதியைச் சேர்ந்த 18 வயதான சுகுமாரன் பார்த்தீப் என்ற இளைஞரே கொலைசெய்யப்பட்டுள்ளார்.

சடலம் தற்போது லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :