(அபூதனா)
அண்மைக்காலமாக ஊடகங்களில் திடீர் அறிக்கைகளை விடுத்து இலங்கை முஸ்லிம்களின் பார்வையைத் தம்பால் ஈர்த்து அரசியல் குளத்தில் மூழ்கி சுயநல சந்தர்ப்பவாத அரசியல் மீனைப்பிடிக்கப்பெரும் பாடுபடும் சிகப்புத் தொப்பி முபாரக் மௌலவியைப்பற்றி அறியாமல் இலங்கைமுஸ்லிம்கள் இருக்கமுடியாது.
இஸ்லாமியமார்க்கத்தில்; ஒரு மௌலவி எப்படி ஒழுக வேண்டும் என ஒரு முறைமை உள்ளது. இவற்றையெல்லாம் மீறி சகோதர முஸ்லிமின் மானத்தை விற்கும் அறிக்கைகளை ஊடகங்களில் அறிக்கை விடுபவர் ஒரு மௌலவியாக இருக்க முடியாது.
கல்முனை மாநகரசபைத் தேர்தலில் இறங்கி 1000 வாக்குகளைக் கூடபெறமுடியாத ஒருவரே இவர். பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களின் ஆதரவையும் வாக்குகளையும் பெற்றுப் பாராளுமன்றம் சென்ற ரிசாட் பதியுதீன் அவர்களையோ, அமைச்சர் றஊப் ஹக்கீம் அவர்களையோ, அமைச்சர் அதாவுல்லா அவர்களையோ, அரசியல் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களையோ விமர்சிக்கும், அல்லது தூசிக்கும் உரிமை முபாரக்கிற்கு இல்லை. நீங்கள் ஒரு பிரதேச சபை உறுப்பினராக இருப்பினும் சமூகத்திற்காக அதை தூக்கி எறிவீரா?
இவர் அதிகாலையில் எழுந்ததும் அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்களைத் தூசிப்பதையே வழக்கமாக்கிக் கொன்டுள்ளார் அண்மையில அமைச்சர் ஹக்கீமின் மகளின் திருமணம்; நடைபெற்றது. இதைக்கூட முபாரக் விமர்சித்திருந்தார். அவரும் ஒரு தந்தை தனது மகளின் திருமணத்தை செய்யும் உரிமை அவருக்குள்ளது. இதைக்கூட இந்த முபாரக் புரிந்து கொள்ளாமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது.
முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ற வாயிலில் வைத்து தூக்கமாத்திரை போடுகிறார்களாம் பின்னர் பாராளுமன்றில் நன்கு தூங்குகிறார்களாம்.வெளியில் வந்து எதையோ பாவித்துவிட்டு மேடைகளில் வீரவசனம் பேசுகிறார்களாம்.இது முபாரக்கின் கண்டுபிடிப்பு.இது எவ்வளவு பெரிய ஓரு அவதூறு இஸ்லாமிய சரியாச்சட்டம் உள்ள நாடாக இருப்பின் 40 கசையடி வழங்கப்பட்டிருக்கும்.
இந்தியாவில் சுப்ரமணியம் சுவாமி,என்ற ஒரு அரசியல்வாதி உள்ளார்.இவர் ஊடகங்களில் தன் பெயர் அடிபடவேண்டும் என்பதற்காக பலபொய்களையும்,கட்டுக்கதைகளையும்,முன்பின் முரணான அறிக்கைகளையும் அவிழ்த்து விடுவார். ஊடகங்களும் அவற்றைப்பிரசுரிக்கும்.ஆனால் இந்திய மக்கள் இந்தமனிதரைக் கண்டு கொள்வதே இல்லை. இதேபோல இலங்கையின் சுப்ரமணிய சுவாமி பாத்திரத்தை முபாரக் ஏற்றுக்கொண்டுள்ளாரா? இவரின் அறிக்கைகள் முதிர்ச்சியற்ற சிறு பிள்ளைத்தனமாக உள்ளது. நீங்கள் தலைதெறிக்க கத்தினாலும் உங்களை இலங்கை முஸ்லிம்கள் கண்டு கொள்ளவும் மாட்டார்கள், கணக்கிலெடுக்கவும் மாட்டார்கள்.
முஸ்லிம் அமைச்சர்களையும், முஸ்லிம் கட்சிகளையும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கண்டித்து அறிக்கைவிட்டு எதிர்காலத்தில்; ஒரு பாராளுமன்ற உறுப்பினராகிவிடலாம் என்ற உமது கனவு ஒரு போதும் பலிக்காது. 'ஆசை இருக்கிறது இராஜாவாக அதிஷ்டம் இருக்கிறது குதிரை மேய்க்க' இந்த நிலைதான் உமக்கு ஏற்படும்.
கல்முனையில் பலசேனாவுக்கு எதிராக கூட்டம் நடாத்திய உங்களுக்கு முதுகெலும்பு இருக்குமானால் அப்படியான ஒரு கூட்டத்தை கொழும்பில் நடாத்திக்காட்டுங்கள்.முடியவில்லையென்றால் நீங்கள் ஓர் ஹாட்போட் வீரர் என்பதை ஒத்துக்கொள்ளுங்கள்.
பலகட்சிகள் அங்கம்வகிக்கும் அரசில் சிக்கல்கள்,பிரச்சினைகள் எழுவது சகஜம்.ஒவ்வொரு சிக்கலுக்கும் அரசைவிட்டு வெளியேறி எதிர்க்கட்சியில் போய் இருக்க முடியுமா?..இன்று தமிழர்கள் அரசோடு மோதப்போய் ஏற்கனவே இருந்ததைக்கூட இழந்திருக்கிறார்கள்.உ-ம் வடகிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டது,மன்னார்,வவுனியா மாவட்டங்களுக்கு சிங்கள அரச அதிபர்கள் நியமிக்கப்பட்டமை.
அமைச்சர்களான றவுப் ஹக்கீம்,றிசாத் பதியுதீன்,ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் போன்றோர் அரசுடன் இணைந்து செயற்பட்டமையால் எமது சகல பிரதேசங்களும் அபிவிருத்தி கண்டதையும்,முஸ்லிம் இளைஞர்களுக்குத்தொழில் வாய்ப்புக்கள் கிடைத்ததையும் எம்மால் மறுக்கமுடியுமா?...நீங்கள் சொல்ல வருவது என்ன?முஸ்லிம் பகுதிகளுக்கு கிடைக்கும் அபிவிருத்தியை நிறுத்துங்கள்.முஸ்லிம் இளைஞர்களுக்குக் கிடைக்கும் வேலைவாய்ப்பைத்தடுங்கள்.வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தையும்,நியாயமாக அவர்களுக்குக்கிடைக்கும் காணி அனுமதிப்பத்திரத்தைத் தடைசெய்யுங்கள். இவற்றையா நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்.
அரசைவிட்டு வெளியேறி எதிர்க்கட்சியில் அமரச்சொல்கிறீர்கள்.அப்படிச்செய்வதால் எமது சமூகம் அதிகம் பெறப்போவது நன்மையா?தீமையா? என்பதைக்கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். ஆத்திரத்தில்,அவசரத்தில் எடுக்கப்படும் முடிவுகள் பிழையானவை ஆகும்.இதை வரலாற்றாய்வி;ன் மூலம் கண்டுகொள்ளலாம்.
ஜனாதிபதியின் ஆலோசகராக இருந்து சுகம் அனுபவித்தபோது இந்த அரசு சுகமாக இருந்தது.அமைச்சர் றிசாத் அவர்களின் கட்சியில் இணைந்து சுகபோகம் அனுபவித்தபோது

வடபுலமுஸ்லிம்கள் தமது தாயகத்திற்குச் செல்வது என்பது கானல் நீராகக்காணப்பட்டபோதே மஹிந்த அரசுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசினதும் கூட்டு ஏற்பட்டது. இதன்பின்பே இம்மக்களின் வாழ்வில் விடிவெள்ளி எழத்தொடங்கியது.இதனால் வடபுல முஸ்லிம்கள் அனைவரும் பெரும் நன்மையை அடைந்துவருகிறார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்துகொள்ளக்கூடிய உண்மையாகும்.
வடபுல முஸ்லிம்களை தனது பதவிக்காலத்தில் எப்படியோ மீளக்குடியேற்றிய தீருவேன் என சபதம் ;பூண்டு உள்ள அமைச்சர் ரிசாட் பதியுதீன் எடுத்;து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் வடக்கின் பலமான சமயத்தலைவரும் ஆயுதக்குளுக்களில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவான விணோ அடைக்கலநாதன், சிவசக்தி, ஆனந்தன் போன்N;றாரும்.ஒன்றாக இணைந்து ஏற்படுத்தும் தடைகளையும், பொய்க்குற்றச்சாட்டுகளையும், ஊடக அறிக்கைகளையும் நாம் எல்லோரும் அறிவோம்.முல்லைத்தீவில் முள்ளியவளையில் முஸ்லிம்களுக்கு அரச அனுமதியுடன் காணி வழங்கினால் அதைத்தடுக்கிறார்கள்.
வவுனியாவில் முஸ்லிம்களுக்கும் நியாயமாக இந்திய வீடு வழங்கினால் அதையும் தடுக்கிறார்கள்.மன்னாரிலும் அரச காணி வழங்குவதையும் ,வீடமைப்புத் திட்டங்கள் செயற்படுவதையும் தடுக்கிறார்கள்.இவ்வாறாக வடமாகாண முஸ்லிம்களுக்கு மேற்சொன்னவர்களால் இளைக்கப்படும் அநீதிகளுக்காக நீங்கள் ஒரு அறிக்கையாவது விட்டிருப்பீர்களா? இந்நிலையில் எப்படிஅமைச்சரை நீர் விமர்சிப்பீர்.
தமிழ்க் கூட்டமைப்பின் குற்றச்சாட்டுகளுக்கு பாராளுமன்றிலும் சரி வெளியிலும் சரி தனியொரு மனிதனாக நின்று கொண்டே போராடுகிறார் என்பதை நீங்கள் அறியாமல் இருப்பதையிட்டு கவலையடைகிறேன்.பாராளுமன்றத்தில் உள்ள ஏனைய அமைச்சர்கள் எமது அமைச்சரின் குரலுக்கு ஆதரவாக குரல் கொடுக்காமை பாரிய ஒரு பின்னடைவே ஆகும்.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 03 பாhளுமன்ற உறுப்பினர்களையும், 01 அமைச்சரையும், மாகாணசபை உறுப்பினர்களையும்,60 உள்ளுர் ஆட்சி உறுப்பினர்களையும்,முசலிப்பிரதேச சபையையும்,தன்னகத்தே கொண்டுள்ளது.இப்படி வளர்ந்து வரும் கட்சியை எச்சக்தியாலும் அழிக்க முடியாது.
1990 ல் வஞ்சிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட வடபுலமுஸ்லிம்களின் நல்வாழ்வுக்காக இரவுபகல் பாராது இனவாத சக்திகளுடன் போராடிச் சாதனைகள் படைத்துவரும் செயல்வீரனை விமர்சிக்கும் உரிமை யாருக்கும் இல்லை.வடபுல முஸ்லிம்களைக் கௌரவமாகக் குடியேற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அரசின் பங்காளிகளாக தொடர்ந்தும் இருக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.எமது அமைச்சரையும் அரசுடன் முரண்படச்செய்து ஒரு பக்கம் தமிழர்களாலும் மறுபக்கம் சிங்களவர்களாலும் நசுக்கப்பட்டு சீரழியும் சமூகமாக மாற்றும் உமது ஆலோசனை எமக்குத்தேவையில்லை.
தயவுசெய்து சுயலாபத்திற்காக மக்கள் செல்வாக்குள்ள அமைச்சர்களை விமர்சிப்பதையும்,மக்களை பிழையாக வழிநடத்துவதையும் நிறுத்திவிடுங்கள்.இல்லையென்றால் உமக்கெதிராக எம் உறவுகள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடாத்தும் நிலைக்குத் தள்ளப்படுவர்.
தம்புள்ள தொடங்கி ஜெய்லானி வரையிலான அனைத்துப்பிரச்சினைகளையும் எமது முஸ்லிம் அமைச்சர்கள் ஒன்றிணைந்து அமைச்சரவைக்கும்,அலரிமாளிகைக்கும் கொண்டுசென்று பிரச்சினையைத்தீர்க்க அரும்பாடுபட்டுள்ளனர்.இதனை நியாயமாகச்சிந்திப்போர் புரிந்துகொள்வர்.

0 comments :
Post a Comment