
(எம்.பைஷல் இஸ்மாயில்)
ஜப்பானின் பிரதிப் பிரதமர் டரோ அசோ மற்றும் பாராளுமன்ற சிரேஷ்ட
உப நிதி அமைச்சர் யுக்கோ ஒபுச்சி ஆகியோர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மே மாதம் முதலாம் திகதி இலங்கை வரவுள்ளனர் என அறியக்கிடைத்துள்ளன.
இந்த இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.
கொழும்பு டொக்யார்ட்டின் 20 வது வருட நிறைவை முன்னிட்டு அதனை பார்வையிடுவதற்காக இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே அவர்கள் இலங்கை வரவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment