(எஸ்.அஷ்ரப்கான்)கல்முனை சமூக முன்னேற்ற ஆய்வு அமையத்தின் (செறோ) 10 வது ஆண்டு நிறைவும் அமைப்பு நடாத்திய சிறுகதை கட்டுரைப்போட்டிகளில் வெற்றியீட்டியவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் அமைப்பின் தலைவர் சாமஸ்ரீ தேச கீர்த்தி ரத்ன தீப
சட்டத்தரணி றினோஸ் ஹனீபா தலைமையில் சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர்
ஏ.எல்.எம். அதாஉல்லா விசேட அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் மற்றும் விசேட அதிதிகளாக அதாஉல்லா அமைச்சரின் இணைப்புச்
செயலாளர் ஏ.பி. தாவூத் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின்போது இவ்வமைப்பின் நினைவுமலர் வெளியீடும் வெளியிட்டு
வைக்கப்பட்டதுடன் செறோ அமைப்பினால் அண்மையில் நடாத்தப்பட்ட சிறுகதை கவிதை கட்டுரைப்போட்டிகளில் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு நினைவுப்பரிசு சான்றிதழ்களும் அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டது.




0 comments :
Post a Comment