
(எம்.பைஷல் இஸ்மாயில்)
சம்மாந்துறை மாவடிப்பள்ளி ஷாட் இஸ்லாமிய அறபிக் கல்லூரியில் 2013/2014 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
மேற்படி கல்லூரியில் கிதாபு, ஹிப்ழு பிரிவுகளுக்கு புதிய மாணவர்களைச் சேர்க்கப்படவுள்ளனர் இதில் ஹிப்ழுப் பிரிவில் சேர விரும்புவோர் 7 ஆம் தரத்திலும் கிதாபுப் பிரிவில் சேர விரும்புவோர் ஆகக் குறைந்தது 10 ஆம் தரத்திலும் கல்வி கற்றிருக்க வேண்டும். எப்பிரிவில் சேர்வதாயினும் குர்ஆனை அழகுற ஓதத் தெரிந்திருப்பதுடன் நல்லொழுக்கமுள்ளவராகவும் இருப்பது அவசியமாகும்.
இதற்கான தகவல்களுக்கும், மேலதிக தொடர்புகளுக்கு 0672260519, 0776176579 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும். அத்;துடன் தங்களின் சுயவிபர கோவையை தாமாகவே பூர்த்தி செய்து பூரணப்படுத்தி Sa'ad Arabic Islamic Institute, Mawadippalli, Karaithivu, Sri Lanka என்ற முகவரிக்கு கிடைக்கக்கூடியதாக அனுப்புமாறு கோரப்பட்டுள்ளீர்கள்.
0 comments :
Post a Comment