யாழ். தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உண்ணாவிர போராட்டம்.




யாழ். தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு முன்னாள் இன்று (29) காலை 7.30 மணியளவிலிருந்து பொதுமக்கள் உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

வலி.வடக்கு மற்றும் வலி. கிழக்கு பகுதிகளில் பொது மக்களுக்குச் சொந்தமான காணிகள் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இன்றைய போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராசா, சுமந்திரன், சிறீதரன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். 

இவர்களுடன் பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் சமயத் தலைவர்கள் என 1000இத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டுள்ளனர். 

பெருந்திரளான பொலிஸாரின் பாதுகாப்புடன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள கூடாது என முகாம்களில் உள்ள மக்களுக்கு இனந்தெரியாத சிலர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். 




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :