மட்டக்களப்பு, தொப்பிகலையில் இராணுவ நினைவுத் தூபி திறப்பு நிகழ்வு-படங்கள்.


ட்டக்களப்பு, தொப்பிகலையில் (குடும்பிமலையில்) நிர்மாணிக்கப்பட்ட இராணுவ நினைவுத் தூபியை பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வைபவ ரீதியாக இன்று (18) திறந்து வைத்தார்.

இலங்கை இராணுவத் தளபதி மேஜர் லெப்டினென்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் அனுசரணையின் கீழ் கிழக்கு இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேராவின் அழைப்பின் பேரில் பாதுகாப்புச் செயலாளர் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்தார்.

30 வருட காலமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திடமிருந்த தொப்பிகலைப் பிரதேசம் மீட்டெடுக்கப்பட்டதன் நினைவாக அங்கு நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்பட்டது.

அந்த நினைவுத்தூபியையே பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று திறந்து வைத்தார்.

அது மட்டுமல்லாமல் தொப்பிகலையில் இராணுவ பாரம்பரியத்தைக் கொண்ட பாரம்பரிய பூங்காவொன்றையும் திறந்து வைத்தார்.

இதன்போது பாதுகாப்புச் செயலாளருக்கு அணிவகுப்புடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் இலங்கை இராணுவத் தளபதி மேஜர் லெப்டினென்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, இலங்கை கடற்படைத் தளபதி, விமானப் படைத்தளபதி, பொலிஸ் மாஅதிபர் என்.கே.இலங்கக்கோன், கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேரா, கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, கிழக்கு மாகாண இராணுவ உயர் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.AD

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :