.jpg)
எஸ்.எல்.பழீல் BA (Hons -uk)
இலங்கை நாட்டில் சுமார் ஆயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட பூர்வீக வரலாற்று கலாசார பாரம்பரியத்தினை முஸ்லிம்கள் கொண்டிருக்கின்றனர். இந் நாட்டின் வடகிழக்கிலும் ஏனைய பிரதேசங்களிலும் தமிழ், சிங்கள மக்களோடு புரிந்துணர்வுடன் வாழ்ந்து இந் நாட்டின் இறைமை சுதந்திரம் அபிவிருத்தி சம்பந்தப்பட்ட துறைகளில் தமது பங்களிப்பினை அவர்கள் செய்து வருகின்றனர். அதேபோன்று இந் நாட்டின் நலனையும் கீர்த்தியினையும் சர்வதேச நாடுகளிடையே மேலோங்கச் செய்வதில் பூர்வீகா காலந்தொட்டு பாரிய பங்களிப்பினை அவர்கள் செய்திருக்கின்றனர்.
இவ்வாறு அமைதியாக அர்ப்பணிப்போடு வாழ்ந்து வரும் முஸ்லிம் சமுதாயம் தீவிர மத வாதி இனக் கும்பலினால் (நுவாழெ சுநடபைழைரள குயளஉளைவ) அநாவசியமாக வஞ்சிக்கப்படுவதும் அவர்களின் சமய, கலாசார அனுஷ்டானங்களில் தேவையில்லாத தலையீடுகளைச் செய்து அவர்களின் அடிப்படை உரிமைகளையும் உணர்வுகளையும் ஒடுக்க நினைப்பதை இந் நாட்டில் வாழும் எல்லா சமுதாயங்களும் வெறுப்புடன் பார்க்கக் கூடிய நிலைமைக்கு இன்று ஆளாகியிருக்கின்றனர். இந்த நிகழ்வுகள் இந் நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாது இஸ்லாமிய சகோதரத்துவ அடிப்படையில் உலகளாவிய ரீதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் சுமார் 150 கோடிக்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்களுக்கு எதிராக விடுக்கப்பட்ட சவாலாகவே நாம் நோக்க வேண்டியிருக்கின்றது.
ஆகவேதான் இந்த நிகழ்வுகளில் இருந்து எம் சமுதாயத்தை காப்பதற்கும், இந் நாட்டு முஸ்லிம்கள் உரிமைகளோடும் மரியாதைகளோடும் தமது கலாசார பண்பாட்டு விழுமியங்களோடும் தொடர்ந்தும் இந் நாட்டில் வாழ்வதற்கும் இவ்வாறான இனக் கும்பல்களின் பித்தலாட்டங்களில் இருந்து எமது எதிர்கால சந்ததிகளை காப்பதற்கும் எமது சகோதர இஸ்லாமிய உலகத்தோடு எமது பிணைப்புக்களை அவசரமாகவும் அவசியமாகவும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய தேவையில் நாம் இருக்கின்றோம். இந்த கும்பல்களின் தேவையற்ற நெருக்குவாரங்கள் உலக இஸ்லாமிய சகோதரர்களோடு இணைந்து செயலாற்ற வேண்டிய தேவையினை வேண்டி நிற்கின்றது.
இவ்வாறு 'சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான அமைப்பின்' (ழுசபயnணையவழைn கழச Pநயஉந ளுழஉயைட ர்யசஅழலெ-ழுPளுர்) நிறைவேற்றுப் பணிப்பாளரும் ஜாமிய்யா நளீமியாவின் முன்னாள் சிரேஷ்ட விரைவுரையாளருமான ஜனாப் எஸ்.எல்.எம் பளீல் சமகால முஸ்லிம் நிகழ்வுகள் பற்றிய 'ஒப்ஸ்' அங்கத்தவர்களுடனான கலந்துரையாடல் ஒன்றின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
உலக இஸ்லாமிய சமுதாயத்தோடு ஒன்றிணையும் முயற்சியில் முன்னோடி நிகழ்வாகத்தான் இலண்டனை தளமாகக் கொண்டு இயங்கி வரும் (Cosmos – UK (Council of Sri Lankan Muslim Organization – UK) ' இலங்கை முஸ்லிம்களின் கவுன்சில்' அமைப்பினை நாம் பார்க்கின்றோம். இவர்கள் இலண்டனில் இயங்கி வரும் சுமார் 17 ஸ்தாபனங்களை உள்ளடக்கி ஐக்கிய இராச்சியத்தில் வாழும் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம்களின் விடயங்கள் சம்பந்தமாக உழைப்பதையும் அதே வேளையில் ஐக்கிய இராச்சியத்தில் வாழும் ஏனைய சமூகத்தவர்களோடு நட்பு ரீதியில் புரிந்துணர்வு சக வாழ்வு என்பவற்றினை முன்னேற்றுவதற்காகவும்இயங்கி வருகின்றனர்.

இந்த இலண்டனை தளமாகக் கொண்ட ஊழளஅழள – ருமு அமைப்பினர் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இந் நாட்டு முஸ்லிம்களுக்கு எதிராக நாளுக்கு நாள் நடைபெற்று வரும் நிகழ்வுகளை கூர்மையாக அவதானித்து அவற்றினால் ஏற்படப்போகின்ற பாதகமான விளைவுகள் பற்றி இலங்கை பாராளுமன்றத்தில் உள்ள முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு மார்ச் 12 ஆம் திகதி விளக்கக் குறிப்பொன்றினையும் நடைமுறை வழிகாட்டலையும் அனுப்பி வைத்திருக்கின்றனர். இதேபோன்று 28.11.2012 இலும் பெப்ரவரி 21 ஆம் திகதி 2013 இலும் எமது ஜனாதிபதிக்கு நீண்ட விளக்கங்களுடன் கூடிய கடிதத்தினையும் அனுப்பி வைத்துள்ளனர்.
நாளுக்கு நாள் கட்டவிழ்த்துவிடப்படுகின்ற அநாவசியமான அசிங்கமான ஆபத்தான இனத் துவேச நடவடிக்கைகள் பற்றி அவர்கள் அம் மடல்களில் எடுத்துக் கூறியுள்ளனர். இலங்கை போன்ற ஒரு பல்லின சமுதாய நாட்டில் அதன் போருக்கு பிந்தியதான அபிவிருத்தி, நல்லிணக்கம் என்பவற்றிலும் இலங்கை சம்பந்தமான வெளிநாடுகளின் பார்வையிலும் பாரிய தாக்கத்தினை இவை ஏற்படுத்தும் என்றும் எடுத்துக் கூறியுள்ளனர். நாளுக்கு நாள் வெளியிடப்பட்டுவரும் கட்டுரைகள் முக நூல் (Face Book), SMS, இணையத்தளங்கள் (Websites) ஆர்ப்பாட்டங்கள் பொய் சுலோகங்கள் ஆக்கிரமிப்புகள் கடை உடைப்புகள் பற்றியும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இவற்றை 'சிங்கள பௌத்தர்கள்', 'சிங்கள வீரவிதான', 'பௌத்த பாதுகாப்பு இயக்கம்' போன்ற முக நூல்களும் 'சிங்கள ராவய', 'சிங்கள பௌத்தர்கள்' 'ஹர்த சாக்ஷிய' போன்ற இணையத்தளங்களும் முஸ்லிம்களுக்கு எதிராக வெளியிட்டு வருகின்றனர். இவற்றை கட்டுப்படுத்துவதோ ஒழிப்பதோ இலங்கை அரசாங்கத்திற்கு பெரிய காரியமல்ல. இவைகளை இந்தக் கட்டத்திலேயே ஒடுக்காவிட்டால் இது பாரிய புற்று நோயாக வளர்ச்சியடைந்து இந் நாட்டின் அடிப்படைகளையே சீரழித்துவிடுமென அவர்கள் எச்சரித்துள்ளனர். அவற்றில்
1. இந் நாட்டின் சமுதாய, பொருளாதார, அபிவிருத்தி நடவடிக்கைகளில் பெரும் தடைகளை ஏற்படுத்தும்.
2. இந் நாட்டின் போருக்குப் பிந்தியதான துரித அபிவிருத்தி நல்லிணக்கம் என்பவற்றுக்கான எமது வெளிநாட்டு உதவிகளை இழக்கச் செய்து விடும்
3. சர்வதேச சமுதாயத்தின் பார்வையில் இலங்கை மனித உரிமைகள் நெருக்கடியுள்ள ஒரு நாடு என்ற பிரதிபலிப்பினை ஏற்படுத்தும்.
4. சர்வதேச ஊடகங்களின் இலங்கை மீதான அழுத்தத்தினை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
அடிப்படை உரிமைகள் :
ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்டு இயங்கும் ஊழளஅழள – ருமு அமைப்பினர் பல கேள்விகளையும் முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் சம்பந்தமாக எழுப்பியுள்ளனர். இலங்கையின் அரசியல் அமைப்பிலும் சர்வதேச சட்டங்கள், உடன்படிக்கைகள், ஐக்கிய நாடுகள் சபையின் அடிப்படை உரிமை சாசானங்களிலும் சொல்லப்பட்ட உரிமைகளை ஏன் அமுலாக்கம் செய்யவில்லை என்ற கேள்விகளையும் அவர்கள் எழுப்பியுள்ளனர். இலங்கை அரசு 1980 ஜூன் 11 இல் கைச்சாத்திட்டு உத்தரவாதம் அளிக்கப்பட்ட சரத்து 2(1) சரத்து 18(1), 26 போன்ற சர்வதேச சிவில் அரசியல் உரிமைகள் சம்பந்தமான (ICCPR) உடன்படிக்கை, மனித உரிமைகள் சம்பந்தமான சர்வதேசப் பிரகடனத்திலும் (UDUR) 1981 இல் பிரகடனம் செய்யப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் சரத்து 2(1) இலும் அடிப்படை உரிமைகள் பற்றிய உத்தரவாதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
எந்த அரசாங்கமோ, நிறுவனமோ அல்லது மக்கள் கூட்டமோ மதம் அல்லது நம்பிக்கையின் அடிப்படையினை வைத்து எந்த சமுதாயத்தையும், இனக் குழுவையும் வேறுபடுத்தி பார்க்க முடியாது. அதேபோன்று மனித உரிமைகள் ஆணையத்தின் 2005ஃ40 ஆவது தீர்மானத்தில் ஒரு சமய நம்பிக்கை அடிப்படையாகக் கொண்டு எந்தவொரு நாடும் வேறுபடுத்தலினையோ கொடுமைகளையோ இழைக்க அனுமதிக்க கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. 1992 ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஐக்கிய நாடுகளின் சபையில் பிரகடனத்திலும் ஒரு தேசிய இனம் அதன் மத, மொழி சிறுபான்மை வேறுபாடுகளைக் கொண்டு பாதிக்கப்படக் கூடாது அந்த இனங்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளது. அடிப்படை உரிமைகள் அடிப்படை சுதந்திரங்கள் சட்டத்தின் முன்னால் எந்தவிதமான வேறுபாடுகளும் இல்லாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதனையும் வலியுறுத்தியுள்ளன.
சர்வதேச மனித உரிமைகள் ஆணையகம் (ர்சுஊ) தனது 6ஃ37-9(ந) இலக்க தீர்மானத்தின் படி சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களுக்கு ஏற்ப மத ஸ்தலங்கள் அவை சார்ந்த பிரதேசங்கள் வழிபாட்டுத்தலங்கள் (ளூசைநௌ) என்பவற்றின் பாதுகாப்பிற்கு உரிய நடவடிக்கைகள் அரசியல் யாப்புக்களில் சேர்க்கப்பட வேண்டும். என்பதை வலியுறுத்தியுள்ளது. ஆகவே இத்தனை காப்புக்கள் அரசியலமைப்பிலும் சர்வதேச உடன்படிக்கைகளும் பிரகடனங்களும் இருக்கத்தக்கதாக இந்த இனத்துவேச பாசிஸ்ட் அமைப்பிலான பொதுபலசேனாவின் (Ethno Religious Fascist Bodhu balasena) அசிங்கமான பித்தலாட்டங்களுக்கு எவ்வாறு இடமளிக்கப்பட்டது என்ற பலத்த கேள்வியும் ஏன் இவர்களின் நடவடிக்கைகளில் சட்டமும், ஒழுங்கும் நிலைநாட்டப்படவில்லை என்ற கேள்விகளும் எழுகின்றன.

இந்த அடிப்படையில் ஜனாதிபதி அவர்கள் தனது நாட்டு மக்களுக்கான சுதந்திர தின உரையில் இந் நாட்டில் உள்ள எல்லா இன மதங்களின் அடிப்படை உரிமைகளும் மத வழிபாட்டு உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதேபோன்று நேற்று (17 ஏப்ரல்) இல் அவர் சந்தித்த 15 இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்களுடனான கலந்துரையாடலில் முஸ்லிம்களுக்கு எதிரான எந்த இனத் துவேச மத விரோத நடவடிக்கையாயினும் தரம் தகுதி பாராமல் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைக்கு உட்படுத்தும் என்று கூறியிருப்பதும் சமாதானத்தையும் சக வாழ்வையும் விரும்புகின்ற மக்களின் உள்ளங்களிலே ஓரளவு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
யார் முன்னெடுப்பது?.....
இந் நாட்டு முஸ்லிம் சமுதாயத்தை பொறுத்த வரையிலே சர்வதேச இஸ்லாமிய உலகத்துடனான பிணைப்பினை ஏற்படுத்தும் கைங்கரியத்தினை முன் நின்று செய்வது யார் என்ற பெரு வினாவிற்கு நாம் விடை காண வேண்டியுள்ளது. ஊழளஅழள – ருமு மற்றும் 52 பலமிக்க இஸ்லாமிய நாடுகளைக்கொண்ட இஸ்லாமிய நாடுகளின் ஒன்றியம் இலங்கை அரசாங்கத்திற்கு முஸ்லிம் சமூகம் சம்பந்தமாக விடுத்துள்ள வேண்டுகோள்களும் விளக்கங்களும் இந்த வரிசையிலே எடுக்கப்பட்ட ஆரோக்கியமான முன்னேற்பாடாக நாங்கள் கருதுகின்றோம்.

செல்வ வளம் கொண்டதாக உள்ள 60க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகளுடனான உறவும் பிணைப்பும் மேலோங்கச் செய்யப்படுவதன் மூலமே இந் நாட்டில் வாழும் முஸ்லிம்களுடைய பூர்வீகமும் இருப்பும் எதிர்காலமும் உறுதிப்படுத்தப்பட முடியும் என்ற திடமான கருத்து இன்று வலுப்பெற்று வருகின்றது. ஆனால் இப் பணியினை யார் செய்வது? முஸ்லிம்களின் பெரும்பான்மை வாக்குகளை பெற்ற அரசியல் கட்சி என்ற அடிப்படையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏன் இந்த சமுதாயப் பணியினை முன்னெடுக்க முடியாது என்ற கேள்வி சமுதாயத்தின் பல மட்டங்களிலும் விடுக்கப்பட்டு வருகின்றது.
உலமாக்கள், புத்திஜீவிகள், சமூகவியலாளர்கள் எல்லோரையும் இணைத்த வகையில் இப் பணி அவசரமாக முன்கொண்டு செல்லப்பட வேண்டும். மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் இலங்கை போன்ற பல்லின நாட்டில் வாழும் இஸ்லாமியர்களின் வாழ்வு, உரிமை பற்றி தூரதிருஷ்டியோடு கருத்துக்களை கூறிச்சென்றமை எமக்கு முன் உதாரணமாக திகழ்கின்றது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான 'தாருஸ்ஸலாம்' இதன் மையக்களமாக இருந்து இஸ்லாமிய சர்வதேச உறவுகளை பலப்படுத்துவதில் முன்னின்று உழைக்க வேண்டுமென்றும் இலங்கை முஸ்லிம்கள் சம்பந்தமான சமூக, பொருளாதார, கல்வி, கலாசார, பண்பாட்டு தரவுகள் இத் தளத்திலே சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.
இலங்கை நாடு பூர்வீக காலம் தொட்டு நெருங்கிய உறவுகளை சர்வதேச இஸ்லாமிய சமூகத்தோடு கொண்டிருந்தது. அராபியக் கடல் கடந்து வாணிப நோக்கத்தோடு எமது முன்னோடி அராபியர்கள் இந் நாட்டில் காலடி வைத்தது முதல் அந்த உறவு பலப்பட்டு வந்திருக்கின்றது.

இந் நாட்டின் உற்பத்திகளையும் தயாரிப்புப் பொருட்களையும் ஏற்றுமதி மூலம் பெற்றுக்கொள்வதில் இஸ்லாமிய நாடுகள் முன் நிற்கின்றன. அது மட்டுமல்லாமல் சவூதி அரேபியா, ஈரான், குவைத், கட்டார் போன்ற எண்ணை வளமிக்க நாடுகள் இலங்கைக்குரிய மொத்த எண்ணைத் தேவையில் 99 வீதத்தினை இன்றும் வழங்கி வருகின்றன.
ஏனைய பொருளாதார உதவிகளின் மூலம் இந் நாட்டின் கட்டுமான உற்பத்தித் துறைகளில் கணிசமான உதவிகளை வழங்கி வருகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக இந் நாட்டின் அந்நியச் செலாவணியில் இன்று முதன்மை பெறுகின்ற வெளிநாடுகளில் தொழில்புரிவோர் வழங்கி வரும் அந்நியச் செலவாணியில் 95 வீதத்துக்கும் மேற்பட்ட வருமானம் இன்று மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் இருந்தே புறப்படுகின்றன.
இலட்சக்கணக்கான இலங்கையர்கள் இந் நாடுகளில் இன்று தொழில்புரிந்து வருகின்றனர். இத்தனைக்கும் மேலாக பூர்வீக காலத்தைப் போல் இன்றும் கூட இந் நாட்டிற்கு சோதனையும், வேதனையும் ஏற்படுகின்ற போது உதவுகின்ற நாடுகளாக இஸ்லாமிய நாடுகளைப் பார்க்கின்றோம்.
கடந்த வருடத்திலும் இந்த வருடத்திலும் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமை மாநாடுகளில் இலங்கைக்கு ஆதரவு வழங்குவதில் முஸ்லிம் நாடுகளே முன் நின்று உழைத்ததனை நாம் பார்க்கின்றோம்.
ஆகவே எல்லா வழிகளிலும் இந் நாட்டின் வளர்ச்சியிலும் உயர்ச்சியிலும் முன் நின்று உழைக்கின்ற இஸ்லாமிய நாடுகளின் சகோதரர்களாக இந் நாட்டிலே பூர்வீக காலம் தொட்டு சமாதானமாக வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்கள் மத கலாசார விழுமியங்களில் இனவாதக் குழுக்களினால் வஞ்சிக்கப்படுகின்றனர் என்ற கூற்று ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்றாகும்.
எனவே இந்தப் பிணைப்புகளை எமது உறவுகளை மேலும் பலப்படுத்தி இவற்றைக்கொண்டு எமது இந் நாட்டு நிலைமைகளை எமது இருப்பினை எமது எதிர்கால சமுதாயத்தின் உரிமைகளை பலப்படுத்தி பாதுகாக்க வேண்டியது எமது ஒவ்வொருவரினதும் பொறுப்பு என்பதனை நாம் இன்னும் உணரவில்லையா? அல்லது எப்போது நாம் உணரப்போகின்றோம் என்ற பெரிய வினாவோடு ஜனாப் பளீல் தனது கலந்துரையாடலை அங்கத்தவர்கள் மத்தியிலே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலே காத்திரமாக கூறி முடித்தார்.
0 comments :
Post a Comment