புத்தளம்
- கொழும்பு பிரதான வீதியின் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில்
புத்தளம் பிரதேச சபையின் தவிசாளர் ஆர்.பி.திலுக் பதிரணகே உயிரிழந்த சம்பவம்
தொடர்பில் சந்தேகத்தின் பேரில் லொரியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் பயணித்த கெப் வாகனம் இன்று அதிகாலை 2.30 அளவில் லொரியுடன் மோதி விபத்துக்குள்ளாகியிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயங்களுக்குள்ளான கெப் வாகனத்தின் சாரதி சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
புத்தளம் பிரதேச சபைத் தலைவர் கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கிப் பயணித்த கெப் வாகனம் விபத்துக்குள்ளானதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். n1st
0 comments :
Post a Comment