சென்னையில் ஒலிக்கும் ஆசாத் சாலியின் குரல்.


ஜெலீல்வெப்.
சென்னை: சிங்கள புத்த பாசிச சக்திகள் முஸ்லிம் மக்களை குறி வைக்க துவங்கியுள்ளனர். முஸ்லிம்களின் வழிப்பாட்டுத்தலம், கலாச்சாரம், வணிக நிறுவனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரம் சிங்கள புத்த பேரினவாத குழுக்களால் தீவிரமாக முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.


இந்நிலையில் சிங்கள பேரினவாத பாசிசத்திற்கும், இதற்கு துணைபோகும் அரசை கண்டித்தும் தமிழகத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் போராட்டங்களை நடத்தியது. இதனைத்தொடர்ந்து, ‘நேற்று தமிழர்கள்!இன்று முஸ்லிம்கள்! சிங்கள பாஸிசத்தை அனுமதியோம்! என்ற தலைப்பில் சென்னையில், எழும்பூர் ஹோட்டல் சிங்கப்பூரில் 16-ஆம் திகதி மாலை 4.45 மணி அளவில் கருத்தரங்கம் ஒன்றை பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தியது. இக்கருத்தரங்கில் பாப்புலர் ஃப்ரண்டின் மாநிலப் பொதுச் செயலாளர் A.காலித் முஹம்மது தலைமை வகித்தார்.



பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயலாளர் J. முஹம்மது ரசீன் வரவேற்புரையற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பாப்புலர் ஃப்ரண்டின் முன்னாள் தேசிய தலைவர் இ.எம்.அப்துல் ரஹ்மான், மாநில தலைவர் A.S.இஸ்மாயீல்,


 இலங்கை தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் A.ஆசாத் ஸாலிஹ், இலங்கை தமிழர் தேசிய கூட்டமைப்பின் ஆலோசகரும், கொழும்பு பல்கலைக் கழக பேராசிரியருமான டாக்டர்.கந்தையா சர்வேஸ்வரன், எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழகப் பொதுச் செயலாளர் நெல்லை முபாரக், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகத்தின் பேராசிரியர் அ.மார்க்ஸ், திராவிடர் விடுதலை கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :