மின் கட்டண அதிகரிப்பால் மாதாந்தம் 42மில்லியன் மேலதிக செலவு -நீர்வழங்கள் சபை


மின்சாரக் கட்டண அதிகரிப்பினால் மாதாந்தம் 42 மில்லியன் ரூபாவை மேலதிகமாக செலவிட வேண்டியுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது.

சபை தற்போது சுமார் 300 மில்லியன் ரூபாவை மாதாந்தம் இலங்கை மின்சாரசபைக்கு செலுத்துகிறது.
எவ்வாறாயினும் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மின்சார கட்டணத் திருத்தத்தால் உற்பத்திச் செலவுக்கு தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கருணாசேன ஹெட்டிஆரச்சி கூறியுள்ளார்.

இதற்கமைய சுமார் 42 மில்லியன் ரூபாவை மேலதிகமாக செலவிடுவதற்கு நேரிடும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலதிக செலவை ஈடு செய்வதற்காக நீர் விநியோகக் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான இணக்கம் இல்லை எனவும் சபை அறிவித்துள்ளது.

வளங்களை சிக்கனமாக பயன்படுத்தியும் செயற்றிறன் மிக்கதான நடவடிக்கைகளை மேற்கொண்டும் மேலதிக செலவை ஈடுசெய்வதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :