10ஆயிரம் வருடங்கள் வரலாறுள்ள மலேரியா நோயை 2014 குள் ஒழிக்கவேண்டும் -அமைச்சர் மைத்திரிபால


(எம்.பைஷல் இஸ்மாயில்)

லேரியா நோயினை 2014 ஆம் ஆண்டிற்குள் இலங்கையிலிருந்து முற்றாக ஒழிக்க வேண்டுமென்ற எமது இலக்கினை நோக்கி நாம் செயற்படுகின்ற போதிலும் அந்நோய் மீண்டும் தலைதூக்குவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதனால் நாம் அனைவரும் அந்நோயை கட்டுப்படுத்துவது குறித்து கூடுதல் அவதானம் செலுத்த வேண்டுமென சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டுள்ளார்.

மலேரியா நோய் சுமார் 10 ஆயிரம் வருடங்கள் வரலாற்றைக் கொண்டது. 1937 ஆம் ஆண்டில் மாத்திரம் 82 ஆயிரம் பேர் மலேரியாவினால் இறந்ததுடன் 15 இலட்சம் பேர் இந்நோய் தாக்கத்துக்கு உள்ளாகினர். இந்நோய் தாக்கம் காரணமாக அநுராத புரத்தில் குடும்பம் குடும்பமாக மக்கள் உயிரிழந்துள்ளனர்.

பின்னர் இந்நோய் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும் 1960 இல் இந்நோய் மீண்டும் தலைதூக்கியது. 1970 ஆம் ஆண்டில் இந்நோய் நாட்டின் அநேக பிரதேசங்களில் பரவியது. 2 ஆயிர மாம் ஆண்டளவில் இரண்டு இலட்சம் பேர் மலேரியா நோய் தாக்கத்துக்கு உள்ளாகினர்.

கடந்த வருடம் (2012 ஆண்டில் நாடுமுழுவதும் 23 பேர் மாத்திரமே மலேரியா தாக்கத்திற்கு உள்ளாக்கியிருந்த போதும் வெளியிலிருந்து இலங்கை வந்த 70 பேர் இதற்கான நோய்க்காவிகளாக செயற்பட்டமையினால் மலேரியா நோய் தாக்கத்திற்கு உள்ளானோரின் எண்ணிக்கை 93 ஆக இருந்தது. இலங்கையில் மலேரியா நோயினை இல்லாமல் ஒழித்த போதிலும் வெளிநாட்டி லிருந்து வருபவர்களிடமிருந்து இந்நோய் தொற்றுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு.

எனவே மலேரியாவை ஒழிக்கும் வேலைத் திட்டத்திற்கு அனைத்து மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமெனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :