தமிழர்களைப் போன்று முஸ்லீம்களும் கிழக்கில் தனிநாடு கோரியவர்கள் அதுதான் ஒலுவில் பிரகடனம் -சம்பிக்க ரணவக்க அல்-கைதா எனும் நூல் வெளியீட்டில்.


ஜாதிக ஹெல உறு மய கட் சியின் பொதுச் செயலாளரும் தொழில் நுட்ப ஆராய்ச்சி மற்றும் அணுசக்தி அமைச்சருமா ன சம் பிக்க ரண வக்க தான் எழுதிய ''அல் ஜிஹாத் அல் கைதா'' எனும் நூலை வெளியிட்டு ஆற் றிய உரை.

தமி ழர் களைப் போன்று முஸ் லிம் களும் கிழக்கில் தனி நாடு கோரி ய வர்கள். அதற் கெ னவே முஸ்லிம் தலை வர்கள் சிலர் ஒலுவில் பல் க லைக் க ழ கத்தில் ஒன்று கூடி ஒலுவில் பிர க ட னத்தை வெளி யிட் டார்கள். இந் நாட்டை எவரும் உரிமை கொண் டாட முடி யாது இது சிங் கள பெளத்த நாடாகும் என ஜாதிக ஹெல உறு மய கட் சியின் செய லா ளரும் அமைச் ச ரு மான சம் பிக்க ரண வக்க தெரி வித்தார்.

கடந்த வெள் ளிக் கி ழமை கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் தான் எழு திய அல் ஜிஹாத் அல் கைதா எனும் நூலை வெளி யிட்டு வைத்து உரை நிகழ்த் து கை யிலே அவர் மேற் கண் ட வாறு குறிப் பிட்டார். அங்கு அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த் து கையில், கடந்த 10 வரு டங் க ளுக்கு முன்பு 2003 ஆம் ஆண்டில் இந்த அல் ஜிஹாத் அல் கைதா என்ற நூலை எழு தினேன். இன்று அந்த நூல் மேலும் பல விப ரங்கள் சேர்க் கப் பட்டு புதிய பதிப் பாக வெளி யி டப் படுகி றது. முஸ் லிம்கள் கிழக்கில் ஆயி ரக் க ணக் கான வரு டங்கள் வாழ்ந்து வரு வ தா கவும் இதனால் கிழக்கில் அவர் க ளுக்கு தனி யாட்சி வேண் டு மெ னவும் கோரிக் கைகள் விடுக் கப் பட் டன. ஒலுவில் பிர க டனம் இத னையே தெரி வித் தது.

ஒலுவில் பிர க டனம் எனது மனதில் பெரும் அச் சத்தை ஏற் ப டுத் தி யது. முஸ் லிம் களும் தமி ழர் களும் இந் நாட்டைப் பிரித்துக் கொள் வார்கள் என்று எனது அடி ம னது கூறி யது. இச் சூழ் நி லையே இந்த நூலை எழு து வ தற்கு கார ணமாய் அமைந் தது. நூலில் முஸ்லிம் அடிப் படை வாதத்தின் கடந்த காலம் நிகழ் காலம் எதிர் காலம் பற்றி எழு தி யுள்ளேன்.

முஸ் லிம் க ளுக்கு இந் நாட்டில் 1300 வரு ட கால வர லாறு உள் ள தெ னக் கூ று கி றார்கள். இது தவறு போர்த் துக் கேயர் இலங் கைக்கு வந் த போது இலங் கையில் முஸ் லிம்கள் இருந் தார்கள். ஆனால் அவர்கள் குடி யு ரிமை பெற் றி ருக் க வில்லை. போர்த் துக் கீசர் இலங் கை யி லி ருந்த முஸ் லிம் க ளுக்கு எதி ரா கவே செயற் பட் டார்கள். அவர் களை விரட் டி ய டித் தார்கள். முஸ் லிம் களின் வியா பா ரத்தை தடை செய் தார்கள். ஆனால் சிங் கள அர சர் களே முஸ் லிம் களைப் பாது காத் தார்கள்.

1518,1538ஆம் ஆண் டு களில் முஸ் லிம்கள் விஜ ய பாகு போன்ற அர சர் க ளா லேயே காப் பாற் றப் பட் டார்கள். இலங் கையில் சிங் களப் பெண் களை மண மு டித்து வாழ்ந்து கொண் டி ருந்த முஸ் லிம்கள் போர்த் துக் கீ ச ருடன் போராட அழைக் கப் பட்ட போது அதற்கு அவர்கள் இணங் க வில்லை. 1821 ஆம் ஆண் டி லேயே போர்த் துக் கீசர் முஸ் லிம் களை அங் கீ க ரித் தனர். இதுவே அவர் களின் வர லாறு.

கடந்த கால யுத் தத்தின் போது நாட்டைக் காப் பாற் று வ தற்கு பயங் க ர வா தி க ளி ட மி ருந்து நாட் டினை மீட் ப தற்கு எந் த வொரு முஸ் லிமும் முன் வ ர வில்லை. சிங் கள இரா ணு வத் தி னரே உயிர்த் தியா கங் களைச் செய்து வடக் கி னையும் கிழக் கி னையும் மீட் டெ டுத் தனர். சிங் கள வீரர்கள் செய்த உயிர்த் தி யா கங் க ளி னாலே இன்று முஸ் லிம்கள் வடக் கிலும் கிழக் கிலும் சுதந் தி ர மாக சகல வளங் க ளு டனும் வாழ் கின் றனர். இதனை முஸ் லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் திக திக்கும் 9 ஆம் திக திக்கும் இடையில் வன்னிப் போர் நடந் தது. இதில் இலங்கை இரா ணுவம் தோல் வியைத் தழு வி யது. இக் கா ல கட் டத்தில் நாம் அப் ப குதி முஸ்லிம் கிரா மங்கள் தோறும் சென்று உதவி கோரினோம். ஆனால் ஒரு முஸ்லிம் கூட உதவ முன் வ ர வில்லை.

எல்.ரி.ரி.ஈயினால் பள் ளி வா சல் க ளுக்குள் முஸ் லிம்கள் கொலை செய் யப் பட் டனர். ஆனால் ஒரு முஸ்லிம் அர சியல் வாதி யேனும் முஸ் லிம் களை நாட் டுக் காக எல்.ரி.ரி.ஈயை எதிர்த்துப் போராடும் படி கோர வில்லை.

உலமா சபை கூட விடு த லைப் பு லி க ளுக்கு எதி ராகப் பேச வில்லை. முஸ் லிம்கள் நாட்டைப் பாது காப் ப தற் காக இரா ணு வத்தில் இணை ய வு மில்லை. சிங் கள இரா ணு வத் தினர் மாத் தி ரமே போரா டி னார்கள். 30 வருட கால யுத் தத்தில் 93 முஸ்லிம் பாது காப்புப் படை யி னரே உயிர்த் தி யாகம் செய் துள் ளனர். இதே வேளை 26 678 சிங் கள இரா ணு வத் தினர் நாட் டுக் காக உயிர் த் தி யாகம் செய் துள் ளனர்.

2005 மற்றும் 2010 பொதுத் தேர் தல் களில் ரிசாத் ப தி யுதீன் அதா வுல்லா போன்ற முஸ்லிம் தலை வர் களே ஜனா தி பதி மஹிந்த ராஜ ப க்ஷவின் வெற் றிக்கு உத வி னார்கள். ஏனை ய வர்கள் ஜனா தி ப தியை தோற் க டிக்கச் செய் வ திலே குறி யாக இருந் தார்கள். உலமா சபை கூட ஜனா தி ப திக்கு வாக் க ளிக் கு மாறு கூற வில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங் கிரஸ் மற்றும் தமிழ் தேசிய கூட் ட மைப்பு என் ப வற்றின் உத வி யில் லாமல் ஜனா தி ப தியை தெரிவு செய் யலாம் என் பதை 2005ல் நாம் உறுதி செய்தோம்.

மூதூரில் 115 முஸ் லிம்கள் எல்.ரி.ரி.ஈயினால் படு கொலை செய் யப் பட்ட போது முஸ்லிம் தலை வர்கள் முஸ் லிம்கள் எல்.ரி.ரி.ஈயி னாலா அல் லது இரா ணு வத் தி ன ராலா கொலை செய் யப் பட் டார்கள் என் பது சந் தே க மாக உள் ளது என் றார்கள்.

யுத்த சூழ் நிலையில் இலட் சக் க ணக் கான முஸ் லிம்கள் அக தி க ளாக கந் த ளாய்க்கு வந் தார்கள். அவர் க ளுக்கு சிங் க ள வர் களே உணவும்,தங் கு மி டமும் வழங் கி னார்கள். அப் போது முஸ் லிம்கள் உணவு ஹலா லா னதா என்று வின வ வில்லை. உணவு வேண்டாம் என்று கூற வில்லை.

2010 ஜனா தி பதி தேர் தலில் முஸ் லிம்கள் ஜனா தி ப தியைத் தோற் க டிக் கவே முயற் சித் தார்கள். இன்று பூனையைப் போன்று இது எமது நாடு முஸ் லிம்கள் நாட் டுக்கு துரோகம் செய் ய வில்லை நாட்டைப் பிரிக்க நாம் கை உயர்த் த வில்லை என் கி றார்கள்.

முன்னாள் மறைந்த ஜனா தி பதி பிரே ம தா ஸாவின் ஆட் சிக் கா லத்தின் போது அவர் சர் வ தேச ரீதியில் பிரச் சி னை க ளுக்கு உள் ளா கி யி ருந்தார். இந் நி லை மையை தமக்கு சாத க மாகப் பயன் ப டுத்திக் கொண்ட முஸ்லிம் தலை வர்கள் முஸ்லிம் மாண வி க ளுக்கு ஹிஜாப் மற்றும் புர்க் காவை சட்ட ரீதி யாக்கிக் கொண் டார்கள். இதற் கான வர்த் த மா னியும் வெளி யி டப் பட் டது. ஆனால் 1990 ஆம் ஆண் டுக்கு முற் பட்ட காலங் களில் முஸ் லிம் களின் இந்த ஆடைக் க லா சாரம் நாட்டில் இருக் க வில்லை.

இதே போன்று இன் றைய சூழ் நி லையில் ஜனா தி பதி ஜெனீ வாவில் சர் வ தே சத் திடம் சிக் கி யி ருக் கிறார் என்று நினைத்து ஹலால் விவ கா ரத்தை முன் னெ டுப் பதை ஒரு போதும் ஏற் றுக் கொள் ள மு டி யாது.

தீக வாபி புனித பிர தேசம் பெளத்த வர லாற்றுப் பிர தே ச மாகும். தீக வா பியை கைப் பற் றிக் கொள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங் கிரஸ் செயற் ப டு கி றது. 12000 ஏக்கர் பரப் ப ளவு கொண்ட இந்த புனித பூமிப் பி ர தேசம் இன்று 656 ஏக் க ராக மாறி யுள் ளது. பெளத்த விகாரைப் பிர தே சங்கள் பெளத்த மரபுரி மைகள் புல் டோ சர் க ளினால் அழிக் கப் பட்டு வரு கின் றன. முஸ்லிம் காங் கிரஸ் கிழக்கு மாகா ணத்தை மையப் ப டுத் தியே இந்த நட வ டிக் கை களை மேற் கொள் கி றது.

அரச சார் பற்ற நிறு வ னங் களும் ஆங் கில ஊட கங் களும் தமிழ் ஊட கங் களும் பெளத்த அமைப் பு களுக்கு எதி ராக செய் தி களை வெளி யிட்டு வரு கி றது. தமிழ் இணைய தளங் களும் சிங் க ள வர் க ளுக்கு எதி ராக செயற் பட்டு வரு கின் றன. நான் அபு தா பியில் இருக்கும் போது பத் தி ரி கை களின் முழு பக்க செய் தி களை வாசிக்க முடிந் தது. இலங் கையில் முஸ் லிம் க ளுக்கு எதி ராக பொது பல சேனாவும் ஜாதி க ஹெல உறுமையும் செயற் படுவதாக செய்
தியில் குறிப் பி டப் பட் டி ருந் தது.

நான் பாட சா லை யிலும் பல் க லைக் க ழ கத் திலும் பயின்று கொண் டி ருந்த போது கமால் அப் து ல் நாஸர் லிபி யாவின் கர்ணல் கடாபி போன்ற தலை வர் களை மதித்தேன்.
1979 இல் ஈரா னிய புரட் சியின் போது ஈரா னிய பல் க லைக் க ழக மாண வர்கள் அமெ ரிக்க தூது வ ரா ல யத்தை ஆக் கி ர மித்து மேற் கொண்ட நட வ டிக் கை களை நான் பெரு மை யாக நினைத்தேன். அவர்கள் தமது கலா சா ரத்தைப் பாது காக் கி றார்கள் என்று நினைத்தேன்.

இதே வேளை நான் திறந்த பல் க லைக் க ழ கத்தில் படித்துக் கொடுத்துக் கொண் டி ருந்த போது நடந்த சம் பவம் எனது மன நி லையில் மாற் றத்தை ஏற் ப டுத் தி யது. என் னிடம் படித்துக் கொண் டி ருந்த ஒரு முஸ்லிம் மாண விக்கும் ஒரு சிங் கள மாண வ னுக்கும் காதல் தொடர்பு ஏற் பட் டது.

இத னை ய டுத்து பல் க லைக் க ழக முஸ்லிம் மஜ்லிஸ் இந்த மாண வியை வகுப் பி லி ருந்து வெளி யேற் று மாறு என் னிடம் கோரி யது மார்க் கத் துக்கு விரோ த மான செயல் என் றது காத லுக்கு இடம் கொடுக்க முடி யாது என்றது.

எனக்கு ஒரு குர்ஆன் பிர தி த ரப் பட் டது. குர் ஆனின் 221 ஆம் பிரிவு 2 சூறாவில் முஸ் லிம்கள் சிலை வணங் கு ப வர் களை மண ம்மு டிக்க முடி யாது என்று கூறப் பட் டி ருந் தது. குறிப் பிட்ட மாணவி தன்னால் வீட் டிலும் சமூ கத் திலும் வாழ முடி யாது என்று அழுதாள்.

இப் போது குறிப் பிட்ட மாணவி பாரிஸில்தான் விரும் பி ய வ ருடன் சுதந் தி ர மாக வாழ் கிறார். அவ ருக்கு எந்தப் பிரச் சி னை யு மில்லை. ஏன் காத லுக்கு இந்தப் பிரச் சினை.
நான் பாரிஸுக்கு வந் தி ருக் கா விட்டால் எனது கழுத்தை வெட்ட முயற் சித் தி ருப் பார்கள் என்றும் அவள் என் னிடம் தெரி வித்தாள்.

முஸ்லிம் பெண் க ளுக்கு இந் நாட்டில் வாக் கு ரி மையைப்பெற்றுக் கொடுத் த வர்கள் சிங் க ள வர்கள் என் பதை முஸ்லிம் பெண்கள் மறந்து விடக் கூ டாது. சர் வ சன வாக் கு ரிமை தொடர்பில் டொனமூர் கமி ஷனைச் சந் தித்த முஸ்லிம் பிர தி நி திகள் முஸ்லிம் ஆண் க ளுக்கு மாத் தி ரமே வாக் கு ரிமை கோரினர். முஸ் லிம் களில் ஆண் பெண் சம மில்லை என்ற கருத் தினைத் தெரி வித் தனர். ஆண்கள் பெண் களை விட மேலா னவர் என் றனர். அதனால் முஸ்லிம் பெண் க ளுக்கு வாக் கு ரிமை வேண்டாம் என் றார்கள்.

ஆனால் டொனமூர் கமிஷன் முன்னிலையில் பிக்குகளும் சிங்களவர்களும் பெண்களுக்கு சம அந்தஸ்து கோரினார்கள். இதனாலேயே 10 இலட்சம் முஸ்லிம் பெண்கள் இன்று வாக்குரிமை பெற்றிருக்கின்றார்கள்.

கல்வித்துறையில் முஸ்லிம் பெண்களுக்கு சம அந்தஸ் தினை கன்னங்கரா வழங்கியதினாலேயே முஸ்லிம் பெண்கள் இன்று உயர்கல்வி கற்கிறார்கள். பல்கலைக் கழகங்களிலிருந்து டாக்டராக பொறியியலா ளர்களாக வெளியேறி சேவை செய்கிறார்கள். இது பற்றி நான் சந்தோசப்படுகிறேன்.

தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்டதாக கூறுகிறார்கள் 10 பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டுள்ளதாக சர்வதேசத்துக்கு கூறுகிறார்கள். ஆனால் விடுதலைப்புலிகளின் காலத்தில் நடந்தவைகள் பற்றி உலமா சபையோ முஸ்லிம் அரசியல் தலைவர்களோ வாய்திறக்கவில்லை.

மாலைத்தீவிலிருந்து எமது நாட்டுக்கு வந்த 56 ஆயிரம் முஸ்லிம்கள் சட்ட விரோதமாக தங்கியிருக் கி றார்கள். இங்கு இவர்கள் கல்வி கற்பதற்கென வந்தவர்கள். இவர்கள் தொடர்பாக நாம் தேடிப்பார்க்க வேண்டும் என்றார்.VV
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :