தேசிய ஐக்கிய முன்னணி(நுஆ) உட்பட நான்கு அரசியல் கட்சிகளின் பதிவுகளை தேர்தல் திணைக்களம் இரத்துச் செய்துள்ளது.


மர்ஹ{ம் எம்.எச்.எம்.அஷ்ரபினால் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய ஐக்கிய முன்னணி(நுஆ) உட்பட நான்கு அரசியல் கட்சிகளின் பதிவுகளை தேர்தல் திணைக்களம் இரத்துச் செய்துள்ளது.
குறித்த அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டவை என்பதை நிரூபிக்கத்தவறியதாலேயே அவற்றின் பதிவுகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
 
ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.டி.எல்.எப்.), தேசிய ஐக்கிய முன்னணி (நுஆ),விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி (பி.எப்.எல்.டி) மற்றும் தேசிய மாற்று முன்னணி (யு.என்.ஏ.எப்) ஆகிய கட்சிகளின் பதிவுகளே இவ்வாறு இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை இது தொடர்பில் தேர்தல் திணைக்கள பிரதி ஆணையாளர் (நிர்வாகம்) எம்.எம்.முஹம்மட்டைஇணையத்தளம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, குறித்த கட்சிகள் தமது பதிவை மீளவும் புதுப்பிக்க இரு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதற்குள் அக் கட்சிகள் மீள் பதிவுக்காக விண்ணப்பிக்காவிடின் அவை முற்றாக இரத்துச் செய்யப்படும் எனக் குறிப்பிட்டார்.
 
அத்துடன் குறித்த காலப்பகுதிக்குள் இக் கட்சிகளுக்கு வேறு எவரும் உரிமைகோர முடியாது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
 
இதற்கிடையில், தேசிய ஐக்கிய முன்னணியை தாம் பொறுப்பேற்றுள்ளதாகக் கூறும் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலியை இணையம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, நுஆவினை தாம் பொறுப்பேற்க விரும்புவதாக தேர்தல் ஆணையாளருக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் குறித்த விண்ணப்பம் கிடைக்கப் பெற்றுள்ளதை தேர்தல் திணைக்களம் உறுதிப்படுத்தி பதில் அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
 
அத்துடன் தம்மைப் போன்று மு.கா. தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமும் கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட்டும் நுஆவை தாம் பொறுப்பேற்க விரும்புவதாக கோரி தேர்தல் திணைக்களத்துக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் அசாத் சாலி மேலும் குறிப்பிட்டார்.
 
அசாத் சாலியின் கைகளுக்கு நுஆ கட்சி சென்று விடக் கூடாது என்பதைத் தடுப்பதற்காகவே அரசாங்கம் இவ்வாறு நுஆவின் பதிவை இரத்துச் செய்துள்ளதாக அறிவித்துள்ளது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
 
அஷ்ரபின் மறைவுக்குப் பின்னர் நுஆவின் தலைவியாக அவரது பாரியார் பேரியல் அஷ்ரப் செயற்பட்டு வந்தர். பின்னர் அவர் நுஆவை கைவிட்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :