இலங்கையின் நெசவு மற்றும் ஆடைத் துறை தயாரிப்புக்களை மேலும் நவீனமயப்படுத்தும் வகையில் கொழும்பு மாநாட்டு மண்டபத்தில் சர்வதேச ஆடைகள் மற்றும் துணி கண்காட்சி கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீனினால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
10 நாடுகளைச் சேர்ந்த ஆடைத்துறை மற்றும் துணி வகைகளை வடிவமைப்பு செய்யும் உற்பத்தியாளர்கள் தமது காட்சிக் கூடத்தை இங்கு அமைத்திருந்தனர்.சுமார் 90 க்கும் மேற்பட்ட காட்சி கூடங்கள் இங்கு ஏற்படுத்தப்பட்டிருந்தன. தையல் இயந்திர உற்பத்திகள்,சர்வதேச நுால் உற்பத்திகள்,சர்வதேச ஆடை உற்பத்திகள்,சர்வதேச சாயம் மற்றும் தனித்துவமான இராசயன உற்பத்திகள்,ஆடை இயந்திர உற்பத்திகள்,ஆடைகள் தைக்கும் இயந்திர சாதனங்கள்,உள்ளிட்ட பொருட்களின் கண்காட்சி கூடங்கள் இங்கு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன
,இலங்கையின் ஆடை உற்பத்திகளுக்கு சர்வதேச தரத்தை பெற்றுக் கொடுத்தல்,அத்தோடு அபிவிருத்தி அடைந்த நாடுகளின் நவீன தொழில் நுட்பத்தை இலங்கை ஆடை துறை தயாரிப்பாளர்களுக்கு பெற்றுக் கொடுத்தல் என்பன இந்த கண்காட்சியின் பிரதான நோக்கமாகும்.
பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் றிசாத் பதீயுதீன் அங்கு உரையாற்றும் போது கூறியதாவது -எமது நாட்டின் உற்பத்திகள் இன்று சர்வதேச சந்தையில் காணப்படுகின்றது.தற்போதைய அபிவிருத்தி சூழல் அதற்கு பெரும் சாதகமான நிலையினை தோற்றுவித்துள்ளது என்றும் கூறினார்.
.jpg)
0 comments :
Post a Comment