பறத்தல் . . !
















ஓட நினைத்துக்
கால் வலித்த கதைபோல
காலம் வலிக்க வலிக்க
கனவுகள் பலிப்பது
போல ஒரு பிரம்மை எனக்கு...

மாசமான பெண்ணியம்
வண்டுகளால் உள்ளேற்கும்
வலிகளினை வெறுப்பதில்லை
மாசக்கடைசிகளில் தானே
பணம் காய்க்கிறது எனது தொழில்...

இறக்கைகள் இருந்தும்
சில சடங்குகளுக்காகவேனும்
நடைபயிலும் புறாக்கள்
நாணிப்போகின்றது
நான் உற்று நோக்கும் போது...

பறத்தல் என்பது
வெறுமனே இறக்கைகளின்
ஓர் இருப்பிட நகர்வல்ல
மனதும் மனதோடு சேர்ந்தவையும்
ஒன்றாகிப்பறத்தல் என்பதாகும்...

காலச்சுவையில் ஊறித்திழைக்கும்
உண்மையான நினைவுகளில்
ஊர்ந்து உதிர்ந்து போகிறது மனசு
பறத்தலுக்கும் இருத்தலுக்கும்
இடையே சண்டையிட்டு...

மெளனபாஷைகள் அழகானவை
நான் மேலும் பறக்க நினைக்கையில்
தேடல்கள் எனை மேலும் மேலும்
உரமூற்றி ஊரெலாம் கூட்டிச்செல்கிறது
இறக்கைகள் இன்றிய பறத்தலிது...

கனவுப்பெட்டகம் காட்சிப்படுத்தப்படுகிறது
காலமும் நானும் நடத்தும் நாடகத்தில்
மனசு மார்தட்டப் பழகிக் கொண்டது
எனக்கேயான இறுமாப்போடு
இருத்தலில் இருந்து பறத்தலாகி...

நடிக்க முடியாத நாடகத்தில்
எனக்கும் ஓர் அங்கம்
இங்கு ஓரங்களில் ஈரமானாலும்
ஈரங்களால் பாரமானாலும்
பாரங்கள் பழகிபோகிறது எனக்கும்...

மனசும் மனசோடு சேர்ந்தவையும்
விடலை கொண்டு விளையாடும் போது
எனக்குள்ளே நான் இறுக்கமாய்
ஊடல் கொண்டு உறங்கிபோகிறேன்
உறங்குதல் பறத்தலுக்குள்ளானதால்...

இறக்கைகள் வெட்டப்பட்டால்
வழர்தல் என்பது;
வாலிபம் முடிந்த கதையாகிறது
வாழ்தலுக்குள் வாலிபமும்
ஓர் உயரிய அங்கமாகியதால்...

வளக்குகள் மாற்றப்பட்டு
வாலிபம் தேற்றப்பட்டாலும்
வாலிபப்பறத்தலில் இருக்கும்
வலிமை இழந்து துடிக்கும்
மானுடம் தேடும் மனிதனாக நான்...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :