நான் அரசாங்கப் பணத்தை வீண் விரயமாக செலவு செய்யாமல் ஆட்சி புரிந்ததனால்தான் 150 கோடி ரூபாக்கு கிபீர் விமானம் வாங்கினேன் -சந்திரிக்கா




என்னுடைய ஆட்சி காலத்தில் இன்று போன்று ஒரு மகனிடம் 11 வாகனங்களும் மற்றுமொரு மகனிடம் 15 வாகனங்களும் இருக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

கண்டி ஸ்ரீ புஷ்பதான மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,

எமது நாட்டில் 225 பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் என சுமார் இரண்டாயிரம் பேர் அதிகாரத்தில் இருக்கின்றனர். ஆனால் இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆக குறைந்த கல்வி தகைமையுடையவர்களாவர். 


இந்நிலையில் எமது நாடு எவ்வாறு வளர்ச்சி அடையும்.

எனது ஆட்சி காலத்தில் எனக்கு உரிமை இல்லாத ஐந்து சதத்தை கூட நான் எடுத்தது கிடையாது. மேலும் எனக்கு வாக்களித்தவர்களுக்கு விருந்தளிக்கவும் இல்லை. எனது தந்தை அரசியலுக்காக நான்காயிரம் ஏக்கர் காணியில் 500 ஏக்கர் காணியை விற்றார். இதேவேளை அரசியலுக்காக எமது வீட்டையும் அடகு வைத்தோம்.

இன்று போன்று ஒரு மகனிடம் 11 வாகனங்களும் மற்றுமொரு மகனிடம் 15 வாகனங்களும் இருக்கவில்லை. ஒரு வாகனத்தையே எமது பிள்ளைகளுக்கு பயன்படுத்த ஒதுக்கியிருந்தோம். இவ்வாறான வீண்விரயங்களை குறைத்து ஆட்சி புரிந்தமையாலேயே 150 கோடி ரூபாவிற்கு ஒரு கிபீர் விமானம் வீதம் எம்மால் யுத்தத்திற்கு செலவிட முடிந்து. எனவேதான் யுத்தத்தையும் வெற்றிகொள்ள முடிந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :