பெண்கள் தனியாகப் பயணிக்க நகரங்கள் பாதுகாப்பில்லை’



பெண்கள் தனியாகப் பயணிக்க இந்திய நகரங்கள் பாதுகாப்பில்லை என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

சாலைகளில் தனியாகப் பயணம் செய்வது பாதுகாப்பற்றது என்று 50 சதவீதம் பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தனியாக இரவு நேரத்தில் பயணம் செய்ய பயப்படுவதாகவே பெண்கள் 73 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

பெண்களிடையே எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் டெல்லி மிகவும் பாதுகாப்பற்ற நகரம் என்று 84 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர். மும்பையும் 74 சத பெண்களால் பாதுகாப்பற்றதாகக் கருதப்படுகிறது.

டெல்லியுடன் ஒப்பிட்டால் சென்னை பாதுகாப்பானதே என்றாலும் மும்பை அளவுக்கு சென்னையில் பாதுகாப்பில்லை என்பது சென்னை வாழ் பெண்களின் கருத்தாக இருக்கிறது. பெண்களுக்குப் பாதுகாப்பான பெருநகரமாக ஒப்பீட்டளவில் கொல்கத்தா உள்ளதாக இந்தக் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது

தனியாகப் பயணிக்கும் போது கத்தி, மிளகாய்த்தூள், போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் தான் பயணிப்பதாக 33 சதவிகித பெண்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :