வாழைச்சேனையில் பொலிஸ் நடமாடும் சேவை.


பாதுகாப்பு செயலாளரின் ஆலோசனையில் பொலிஸ்மா அதிபரின் வழகாட்டலில் பொலிஸ் சேவையை மக்களின் காலடிக்கு எடுத்துச் செல்லும் செயற்திட்டம் இம்முறை கிழக்கு மாகாணத்தில் நடை பெறவுள்ள தேசத்திற்கு மகுடம் எனும் வேலை திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இப் பொலிஸ் நடமாடும் நிலைய வேலைத்திட்டத்தில், வாழைச்சேனை பொலீஸ் நிலைய மக்கள் தொடர்பால் பிரிவு, பல் வேறுபட்ட நிகழ்ச்சி திட்டங்களை இதன் போது சிவில் பாதுகாப்புக் குழுக்களும் பிரதேச அமைப்புக்களும் இணைந்து நடாத்துகின்றனர்.

இதன்போது டெங்கு ஒழிப்பு சிரமதான நடவடிக்கைகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள், சமயநிகழ்வுகள், பாடசாலை மாணவர்களுக்கிடையிலான விழிப்புணர்வு நிகழ்வுகள், வீதி போக்கு வரத்து தொடர்பான அறிவூட்டும் செயலமர்வுகள், போட்டி நிகழ்ச்சிகள் என்பன உள்ளடக்கியதாக 13 நாட்கள் கொண்டதாக பல தரப்பட்ட சமூகங்களுக்கிடையிலான இன நல்லினக்கத்தை கருத்தில் கொண்டு இவ் வேலைத்திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டது.

அதன் இறுதி நிகழ்வு நேற்று செவ்வாய் கிழமை (26.02.2013) மட்- ஜெயந்தியாய மட்-ரிதிதென்ன இக்ரஹ் வித்தியாலய பிரதான மண்டபத்தில் வாழைச்சேனை பொலீஸ் நிலைய மக்கள் தொடர்பால் பிரிவு பொறுப்பதிகாரி யூ.எல். இமானுல்லாஹ் தலைமையில் இடம் பெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலீஸ் மா அதிபர் திரு பூஜித் ஜயசுந்தர மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிரோஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் திரு அஜன்த சமரகோன், வாழைச்சேனை பொலீஸ் பிரிவின் உதவி பொலீஸ் அத்தியட்சகர் குருலால் செனவிரத்ன உள்ளிட்ட பொலீஸ் உயர் அதிகாரிகள், மத குருமார்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பெருந் தொகையான பொது மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

365 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் மற்றும் தென்னங் கண்றுகளும், போட்டி நிகழ்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசு பொதிகளும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :