அசாத் சாலி தன்னைத்தானே டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி பழைய மாணவன் என கூறக் கூடாது -கம்மன்பில


முன்னாள் கொழும்பு மாநகர பிரதி மேயர் அசாத் சாலி டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியின் பழைய மாணவர் என பெருமைப்பட்டுக் கொள்ள அருகதையற்றவர் என ஜாதிக ஹெல உறுமயவின் பிரதிப் பொதுச் செயலாளரும் மேல் மாகாண சபை அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.அசாத் சாலி என்னையும் டி.எஸ்.சேனநாயக்கவில் கல்வி கற்ற எனது பாடசாலை நண்பரான பொதுபல சேனாவின் இணைப்பாளர் டிலாந்த விதானகேவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

அசாத் சாலி தன்னை டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி பழைய மாணவர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்பட்டுக் கொள்கிறார். பாடசாலை பதிவுப் புத்தகத்தில் பெயர் இருக்கிறது என்பதால் மாத்திரம் ஒருவர் கல்லூரியின் பழைய மாணவராகிவிடமுடியாது. 

எமது கல்லூரியின் கலாசாரத்திற்கேற்ப அசாத் சாலி தன்னை டி.எஸ்.பழைய மாணவன் என்று சொல்ல முடியாது.டி.எஸ். கல்லூரியில் கல்வி கற்ற நான் இன்று ஹெல உறுமயவின் பிரதிப் பொதுச் செயலாளராக இருக்கிறேன். அங்கு கல்வி கற்ற நிஸாம் காரியப்பர் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதிப் பொதுச் செயலாளராக இருக்கிறார். 

அதேபால அங்கு கல்வி கற்ற டிலாந்த விதானகே பொதுபல சேனாவின் இணைப்பாளராக இருக்கிறார்.என்னுடையதோ சகோதரர்களான நிசாம் மற்றும் டிலாந்தவினதோ பெயர்கள் வெறுமனே பாடசாலை பதிவுப் புத்தகத்தில் மாத்திரம் இல்லை.

 நாங்கள் டி.எஸ். கலாசாரத்தின் பாதுகாவலர்களாக இருக்கிறோம்.இதிலிருந்து அசாத் சாலி ஒழுங்காக பாடசாலைக்கு சமுகமளிக்கவில்லை என்பது தெரிகிறது. எனவே இதன்பிறகாவது அசாத் சாலி தன்னைத்தானே டி.எஸ். கல்லூரி பழைய மாணவன் என கூறக் கூடாது எனவும் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :