உயர்தர மாணவி ஒருவரை கடத்திச்சென்று 3 நா‌‌ட்க‌ள் அறையொன்றில் அடைத்து வைத்து பாலாத்காரம் புரிந்த ஆசிரியர் கைது.

பிளஸ் 2 மாணவி ஒருவரை கடத்திச்சென்று 3 நா‌‌ட்க‌ள் அறையொன்றில் அடைத்து வைத்து, பலாத்காரத்திற்கு உட்படுத்திய, ஆசிரியர் ஒருவருக்கு செ‌ன்னை மகளிர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 

சென்னை எருக்கஞ்சேரியில் டான்பாஸ்கோ மேல் நிலைப்பள்ளி‌யி‌ல் அமலன் (38) என்பவர் ஆங்கில ஆசிரியரா பணியாற்றினார். 

இந்த நிலையில், அந்தப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த 17 வயது மாணவி ஒருவரை, கட‌ந்த 2010 ஆ‌ண்டு ஜனவ‌ரி 5-ம் திகதி அமல‌ன் கடத்தி சென்றார். 

நாகப்பட்டினம், புதுச்சேரி ஆகிய இடங்களில் உள்ள விடுதிகளில் மூன்று நாட்கள் தங்க வைத்து மாண‌வியை பலமுறை இவர் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளார். 

அதன்பிறகு மாணவியின் வீட்டருகே விட்டுச்சென்றுவிட்டார். இந்த சம்பவம் குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். 

இதுபற்றி கொடுங்கையூர் பொலிசில் மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். இதுகுறித்த வழக்கு சென்னை மகளிர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌‌தி‌ல் நட‌ந்து வ‌ந்தது. 

இ‌ந்த வழ‌க்‌கி‌ல் நீதிபதி மீனா சதீஷ் அ‌ளி‌த்த ‌தீ‌ர்‌ப்‌பி‌ல், பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த வாக்குமூலமும், மருத்துவ ஆதாரங்களும், வாக்குமூலங்களும் ஒன்றோடொன்று இசைந்திருப்பதால், குற்றச்சா‌ற்றுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே ஆசிரியர் அமலனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.21 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது என தீர்ப்பளித்தார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :