சட்டத்தரணிகள் இன்று மெழுகுவர்த்திகளை ஏற்றி அமைதிப் போராட்டம்


கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்கு முன் சற்றுமுன் கூடிய சட்டத்தரணிகள் குழுவொன்று, 'இன்று நீதிமன்றம் ஒரு மரண வீடாகியது' எனக் கூறி மெழுகுவர்த்திகளை ஏற்றி அமைதிப் போராட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர்


நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைய முற்பட்ட மேற்படி சட்டத்தரணிகள் குழுவை அங்கு விசேட பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வரும் பொலிஸார் அனுமதி மறுத்தனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையில் நீண்ட நேரமாக வாக்குவாதம் இடம்பெற்றது

இதேவேளை, புதிய பிரதம நீதியரசருக்கு வாழ்த்து தெரிவித்து நீதிமன்ற வளாகத்துக்கு முன் மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டு வருபவர்களை அங்கிருந்து களைக்குமாறும் மேற்படி சட்டத்தரணிகள் குழுவினால் பொலிஸாரிடம் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது

அவர்களது வேண்டுகோளுக்கு பொலிஸார் செவிசாய்க்காத நிலையிலேயே, மெழுகுவர்த்திகளை ஏற்றி அமைதிப் போராட்டமொன்றில் சட்டத்தரணிகள் ஈடுபட்டனர். TM
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :