மழைக்காலத்து நிஜங்கள் - சிறுகதை

மழைக்கால மதிய நேரமது. மங்கலான வெளிச்சமும் மனது குளிர்ந்து கொண்டிருக்கின்ற வெப்பமும் சூழலை நிரப்பி இருந்தது. பதமான காற்று இதமாய் வீசிக் கொண்டிருந்தது. உடம்பு போலவே உள்ளமும் குளிர்ந்து கொண்டிருந்தது அலைந்து கொண்டிருக்கும் காற்றி --
-னூடே சிந்தனை அலைகளும் மிதந்து கொண்டிருந்தன. 

வானப் பந்தலில் ஒரு காட்சி.

வெண்மேகக் கூட்டங்கள் இரண்டு பவனி நடைபயின்று கொண்டிருக்கின்றன.

நாணங்கொண்ட நங்கையைப் போல் ஒன்று. நாடி ஓடு- -கின்ற இளைஞனைப்போல் மற்றொன்று.
முன்னால் செல்லும் நங்கையை நெருங்கி இளைஞன் வருவதும் நங்கை நாணிக்குறுகி, நளினங் காட்டி, அன்னநடை பயிலுவதும் பின்னால் நீண்டிருக்கும் கருங்கூந்தலை இளைஞன் முகர்ந்து பார்ப்பதும் மங்கை சிணுங்கி சிறிது தூரம் செல்லுவதும் ஓடுவதும் ஒன்றை யொன்று தழுவிக் கொள்ளுவதும் முத்தமிடுவதும் அதில் மூழ்கி இருப்பதும் பின் பிரிவதும் மீண்டும் மீண்டும் தொடரும் ஊர்வலம் நடந்துகொண்டிருந்தது.

வானத்தை இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருக் கிறான் மனா. சிந்தனைச் சிதறல்கள் அவனைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாகத் தாவுகின்றன.

மனாவுக்குள்ளும் கேள்விகள் பிறக்கின்றன.

என்ன இது? இரண்டும் தழுவும்போது எதனைப் பேசிக் கொள்ளுகின்றன?
'கூந்தல் மணம்' பற்றிய குட்டி விவாதமோ!
காதோரம் சொல்லும் காதல் கவிதைகளோ!
'காற்றிடைவெளியில்லா நெருக்கம்' பற்றிய குறும் விபரணமோ!
காலத்தின் கோலம்பற்றி கேள்வியுற்ற உரையாடலோ!

காட்சி நிகழ்ந்த வண்ணமே இருந்தது.

மனா சோர்ந்துவிடவில்லை. அவனது அவதானிப்பும் தொடர்ந்த வண்ணமே இருந்தது.

'உண்மைகள் நீண்ட நேரம் உறங்காது' என்பதைத் தெரிந்து வைத்திருந்தான் அவன்.

உற்று அவதானிக்கிறான் மனா. மேகங்களினது அடக்கமான வார்த்தைகள் சின்னதான ஓசையாய் கொஞ்சமாய் வெளிவந்தன.

பின்னால் ஏன் துரத்தினாய்? முகத்தில் முகம் உரசிக் கொண்ட மேகமங்கை சிணுங்கலாய்க் கேட்டாள்.

சிணுங்கல் மேலும் தொடர்ந்தது. என்மேல் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறாய் இது போதுமய்யா எனக்கு.

வாலிப மேகமும் வாயசைத்தது. அடியே பதி! கெஞ்சுவதும் கொஞ்சுவதும் வாழ்க்கையாடி.
இது கொஞ்ச நேரந்தானேடி.

அன்றொரு நாள் ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த சோடிக் கொக்குகள் களைத்துப்போய் பறக்க முடியாது பறந்து கொண்டிருந்ததைக் கண்டு என்னுடைய மேலாடையைக் கொண்டு கதிரவன் கதிர்களைத் தடுத்தேனடி.
உன்னுடைய முந்தானையை விரித்து நீ நிழல் கொடுத்தாயடி.
துரத்தி வந்த பருந்திடமிருந்து கொக்குகளைக் காப்பாற்ற நமது வெள்ளை மேலாடையை விரித்து, அடைக்கலம் கொடுத்து கொக்குகளைக் காப்பாற்றினோமடி. மறந்ததா போச்சுது உனக்கு.

கொஞ்சுவதும் கெஞ்சுவதுமாடி வாழ்க்கை.

தொடரும்.....

அப்துல் முனாப் -பி.ச.உ.
(மருந்தாளர்)
அட்டாளைச்சேனை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :