பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கம் செய்யப்பட்டால் அடுத்த பிரதம நீதியரசராக முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் நியமிக்கப்படுவார் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று (11) பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட பிரதம நீதியரசர் மீதான குற்றப்பிரேரணை தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக்குழு அறிக்கை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்போது ஜனாதிபதியால் குறித்த அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு பிரதம நீதியரசர் பதவி நீக்கம் செய்யப்பட்டால் அடுத்த பிரதம நீதியரசராக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எல்லோர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.
இதில் முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ், ஷிராணி திலகவர்த்தன, சத்யா ஹெட்டிகே ஆகியோரது பெயர்கள் முணுமுணுக்கப்படுகின்றன.
எனினும் மொஹான் பீரிஸுக்கு குறித்த பதவியை வழங்க அதிக வாய்ப்புக்கள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதெதரண

0 comments :
Post a Comment