தமிழ்.முஸ்லீம் உறவுகளை கட்டியெழுப்புவோம் கிழக்கு மாகாண முஸ்லிம் சிவில் அமைப்பு

















ஏ.எல்.றமீஸ் - தைக்கா நகர்      



பிரதிநிதிகள்.                        
       இலங்கையில் குறிப்பாக வடகிழக்கில் மிக நீண்ட காலமாக தமிழ் மொழி பேசும் இனம் என்ற வகையில் முஸ்லிம்களும்.தமிழர்களும் ஒட்டி உறவாடியிருந்த அந்த பொற் காலத்தை மீண்டும் நிலை நிறுத்தும் வகையில் இம்மாதத்தில் கிழக்கு மாகாண முஸ்லீம் தூதுக் குழு ஒன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரையும் சந்திதித்து முஸ்லிம்களின் பிரச்சினைகள் எதிர்காலத்தில் வரக்கூடிய ;  சந்ததிகளுக்கு இனவுறவை நிலை நாட்டுவதற்கான அடித்தளத்தை இடுவதோடு தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்ற முஸ்லீம்கள் மீதான கண்ணோட்டத்தையும் கசப்பு தன்மையையும் நீக்கும் வகையில் இதய சுத்தியுடன் இரு சமூகங்களும் மனம் திறந்து அன்பை பரிமாறவுள்ளோம்.       

  அத்தோடு பிரிந்து நிற்கும் தமிழ் முஸ்லீம் உறவை கட்டியெழுப்புவதோடு. முஸ்லீம்களை பகைத்து தமிழ் மக்களும் தமிழ் மக்களை பகைத்து முஸ்லீம் மக்களும் ஒரு போதும் வாழ முடியாது. எனவே இரு சமூகங்களும் புரிந்துணர்வு அடிபபெ;படையில் நிலையான நல் உறவை கட்டியெழுப்புவதோடு பொதுவான பொதுவான ஓர் இனக்கப்பாட்டிற்கு வந்து எதிர்காலத்தில் எழக்கூடிய பேரின வாதி;களின் சூழ்சிகளையும் அடாவடித்தனங்களையும் முறியடித்து தமிழ் பேசும் சமூகங்களான நாங்கள் ஓரணியில் நின்று எங்கள் கரங்களை பலப்படுத்தி சமூக ஒற்றுமையின் சக்தியையுபம் பேரின வாதிகளுக்கும் சார்வதேசத்துக்கும் எடுத்துக்காட்டவிருக்கின்றோம் என கிழக்கு மாகாண முஸ்லீம் சிவில் அமைப்பின் பிரதிநிதியொருவர் தெரிவித்தார்                                   

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :