அமைச்சுப்பதவி வேண்டாம் வெளிநாடு ஒன்றுக்கான தூதுவராக நியமிக்கவும் - மேர்வின் சில்வா

அமைச்சர் மர்வின் சில்வா 12 ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் விசேட வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளதாக அறியக்கிடக்கிறது.

தற்போது தான் பதவி வகிக்கும் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து பதவிநீக்கம் செய்து, அதற்குப் பதிலாக வெளிநாடொன்றின் தூதுவராக தன்னை நியமிக்குமாறு வேண்டியுள்ளார்.

அமைச்சர் இந்தவேண்டுகோளை சென்ற 12 ஆம் திகதி களனிப் பிரதேச சபை உறுப்பினரின் கொலைச் சம்பவத்தோடு எழுந்துள்ள பிரச்சினைகளின் பின்னரேயே குறிப்பிட்டுள்ளார். அங்கு அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

எந்தவொரு விசாரணையையும் மேற்கொண்டு தன்னைக் குற்றவாளியாகக் காட்டுமாறும், களனித் தொகுதியின் அமைப்பாளர் பதவியை பஸில் ராஜபக்ஷவுக்கு வழங்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.

தொலைபேசி மூலம் விடுக்கப்பட்டுள்ள இந்த வேண்டுகோளுக்கு ஜனாதிபதி இதுவரை எந்தவொரு பதிலையும் அளிக்கவில்லை என அலரிமாளிகையிலிருந்து வெளிவருகின்ற செய்திகள் குறிப்பிடுகின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :