அட்டாளைச்சேனைப்பிரதேச சபை மக்களை ஏமாற்றுகிறது.


(எஸ்.எம்.அறூஸ்)

அட்டாளைச்சேனை புறத்தோட்டம் 9ம் பிரிவில் மாட்டுக் காளைகள் கட்டப்பட்டிருப்பதால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். 

தற்போது மாரி காலம் என்பதால் மாட்டுச் சானத்தின் நாற்றம் மிக மோசமாக உள்ளது. மக்கள் வீடுகளில் இருக்க முடியாத அளவிற்கு தூர் நாற்றம் வீசுகின்றது. இரவு வேளைகளில் மாடுகள் குடியிருப்பு வேளிகளை உடைத்து சேதப்படுத்துவதுடன் பயிர்களையும் நாசப்படுத்துகின்றது.

இது விடயத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபை மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் என்பன உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பல தடவைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. 

பதவி பெறுவதற்காக மக்கள் காலடிக்கு வரும் அரசியல் வாதிகள் அந்த மக்களின்; பிரச்சினை என்று வருகின்றபோது ஓடி ஒளிந்து கொள்கின்றனர். தங்களுக்கு உழைக்கலாம் என்று எது தென்படுகின்றதோ, அவ்வாறான விடயங்களுக்கே முன்னுரிமை கொடுக்கின்றனர்.

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு பிரதேச சபை உறுப்பினர் அப்துல் முனாப் ஊடாக முறைப்பாடு செய்தும் இதுவரை மாட்டுக் காளைகள் அகற்றப்படவில்லை. இதற்குக் காரணம் பிரதேச சபை உறுப்பினரின் அசமந்தப் போக்கா? அல்லது தவிசாளரின் பொடு போக்கா? என மக்கள் யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :