வறுமையற்றதோர் இலங்கை அட்டாளைச்சேனையில்


(எம்.பைஷல் இஸ்மாயில்)


ஜனாதிபதியினால் கடந்த வரவுசெலவுத் திட்டத்தில் மும்மொழியப்பட்ட வறுமையற்றதோர் இலங்கை தேசம் எனும் இலக்குடனான வேலைத்திட்டத்தின் கீழ் நிறைவான இல்லம் - வளமான நாடு எனும் செயற்பாடு தொடர்பாக பிரதேசமட்டத்தில் அலுவலர்களையும், கிராம மக்களையும் அறிவுறுத்தும் தேசிய நிகழ்ச்சித்திட்டம் தொடர்ன நிகழ்வு நேற்று அல் முனீறா உயர் பெண்கள் பாடசாலையில் இடம்பெற்றது.

இவ் விளக்கமளிக்கும் கூட்டம் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர் அதாஉல்லா, மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, மாவட்ட உதவி திட்டப்பணிப்பாளர் ஐ.எல். தௌபீக், மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், அட்டாளைச்சேனை பிரதேசசபைத் தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் ஆகியோர் அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டுள்ள 'திவிநெகும' நிறைவான இல்லம் - வளமான நாடு எனும் இத்திட்டம் தொடர்பாக உரை நிகழ்த்தினர்.

 மேற்குறிப்பிட்ட அதிதிகள் அனைவரும் 'திவிநெகும' நிறைவான இல்லம் - வளமான நாடு எனும் இத்திட்டம் வறுமை இல்லாத ஒரு தேசத்தைக் கட்டியெழப்ப முடியும். எனவும் அரசாங்கத்தின் திட்டங்களையும், கொள்கைகளையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதும், தெளிவுபடுத்துவதும் அதிகாரிகளின் முக்கிய பொறுப்பும் கடமையாகவும் காணப்படகின்றன. எனும் தொனிப்பொருளை வைத்து உரையாற்றினர்.

இந் நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.எம்.அஸ்லம், கணக்காளர் முஹம்மட் நஜிமுடின், பிரதேசசபை உறுப்பினர்களான எஸ்.எல்.முனாஸ், எம்.றியாஸ் மற்றும் அரச அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :