அட்டாளைச்சேனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரும் மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.எம்.நஸீரின் அலுவலகக் காரியாலயம் திறப்பு.

(எம்.பைஷல் இஸ்மாயில், எஸ்.எம்.அறூஸ், ஏ.எல்.றமீஸ்)


சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், அட்டாளைச்சேனை அமைப்பாளருமான ஏ.எல்.எம்.நஸீரின் அலுவலகக் காரியாலயம் அட்டாளைச்சேனை பிரதான வீதியில் நேற்று 2013.01.17 ஆம் திகதி வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும், தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரீ.ஹசனலி, மற்றும் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்ட திகாமடுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், மாகானசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் இவர்களுடன் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் ஆகியோர் உரையாற்றினர்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், பிரதித் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா சபை உறுப்பினர்களான எஸ்.எல்.முனாஸ், ஐ.எல்.அப்துல் மனாப் உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :