இலங்கையில் வாழும் பெளத்தர்களின் உத்தியோகபூர்வமற்ற பொலிசார் நாங்களே என்கின்றார்கள் இவர்கள்

Share on


இலங்கையில் வாழும் பெளத்தர்களின் உத்தியோகபூர்வமற்ற பொலிசார் நாங்களே என பொதுபலசேன அமைப்பு தெரிவித்துள்ளது.நாட்டின் பெளத்த மரபுரிமையைக் காக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுபலசேன அமைப்பினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றும் போதே அதன் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வடக்கும் கிழக்கும் பெளத்தர்களின் மரபுரிமை மற்றும் புராதன சின்னங்கள் அடங்கிய பிரதேசங்களே.இது தொடர்பில் அரசியல் வாதிகள் பொறுப்பற்று செயற்படுகின்றனர்.அனுராதபுரத்தில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசல் எரிந்ததற்காக ஜனாதிபதி அதனை மீள நிர் மாணிக்க 5 லட்சம் ரூபா ஒதுக்குகிறார்.பெளத்தர்களின் மரபுரிமைகளை பாதுகாக்க யார் முற்சிக்கிறார்கள்.கிழக்கில் எங்களுடைய புராதன மரபுரிமையைக் கொண்ட இடங்கள் டோசர் கொண்டு அழிக்கப் படுகின்றன. எமது புராதன சின்னங்கள் உள்ள இடங்களை கண்டு அவ்விடங்களில் குறைந்தபட்சம்  போதி மரக்கிளை ஒன்றையேனும் நட்டு வைக்கவேண்டும்.
நாம் தொடர்ந்தும் மௌனித்திருந்தால் எமது புராதன மரபுரிமை சின்னங்கள் உள்ள இடங்கள் இஸ்லாமிய நூதனசாலையாக மாற்றம் பெற்றுவிடும்.எனவே நாம் இதன் பின் பார்த்துக்கொண்டிருக்கப் போவதில்லை.பெளத்தர்களின் மரபுரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது.நாம் பெளத்தர்களின் உத்தியோக பூர்வமற்ற  பொலிசார் என்ற வகையில் அதனை மேற்கொள்வோம் என அவர் தெரிவித்தார்.


இது எப்படி இருக்கு இச்செய்தியினை படித்தீர்களா..?
இன்னும் பல செய்திகளை தருகிறோம் கீழே உள்ள பேஸ்புக் இல் Like ஐ கிளிக் பண்ணுங்க...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :