2013 ஆம் ஆண்டுக்கான சட்டக் கல்லூரி கற்கை நெறிக்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களில் கொழும்பு ரோயல் அகடமியில் கற்று தெரிவான மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு, குறித்த கல்வி நிலையத்தில் இன்று இடம்பெற்றது. சட்டத்தரணி எம்.கே.எம். சஜாத் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் ரோயல் அகடமியில் கற்று சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சையில் முதலாம், இரண்டாம் மற்றும் 5 ஆம் இடங்களைப் பெற்ற மாணவிகளுடன் ரோயல் அகடமியில் கற்று சித்தியெய்திய அனைத்து மாணவர்களும் கெளரவிக்கப்பட்டனர். இக் கெளரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட சட்டத்தரணி முர்ஷித் மஹ்ரூப், கெளரவ அதிதியாக கலந்துகொண்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம்.அமீன் ஆகியோர் குறித்த மாணவர்களுக்கான நினைவுச் சின்னங்களை வழங்கி கெளரவித்தமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments
(
Atom
)



0 comments :
Post a Comment