துபாயில் 13 வீடுகளில் திருடிய பணியாளர் கைது.. !!

ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள வீட்டுத் தொகுதி ஒன்று காவல்காரராகச் சென்ற பங்களாதேஷ் இளைஞர் ஒருவர் கொள்ளையடித்த பொருட்களையே கீழுள்ள படத்தில் காண்கிறீர்கள்.ஐ.அ.இராச்சியத்தின் அல் ஐன் பகுதியில் உள்ள வீட்டுத் தொகுதியில் பணியாற்றிய இவர், இவருக்கு தொழில் அனுசரணை வழங்கியவரின் வீடு உட்பட மொத்தம் 13 வீடுகளில் கொள்ளையடித்துள்ளார். தான் கொள்ளையடித்த பொருட்கள் அனைத்தையும் தனது அறையிலேயே இவர் பதுக்கி வைத்துள்ளார். இவர் கொள்ளையடித்த பொருட்களில் பெறுமதிவாய்ந்த தங்க நகைகள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்களும் உள்ளடங்குவதாக அல் ஐன் பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த வீட்டுத் தொகுதியில் காவல்காரரான இவர், வீடுகளிலிருந்து ஆட்கள் வெளியேறிய பின்னரே அங்கு நுழைந்து கொள்ளையடித்து வந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். பெரும்பாலான வீடுகளின் பூட்டுகள்,கதவுகள், யன்னல்கள் என்பன உறுதியாக இல்லாமையே இவ்வாறு இலகுவாக கொள்ளையடிக்கக் காரணம் என பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். பங்களாதேஷிலுள்ள தனது வீட்டுக்குப் அனுப்பும் நோக்கிலேயே இவ்வாறான கொள்ளைகளில் தான் ஈடுபட்டதாகவும் 27 வயதாக குறித்த இளைஞர் பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :