Share on
முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ஊட்டி கோர்ட்டில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று ஆஜரானார். ஊட்டியில் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி தேமுதிக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா உள்ளிட்டோர் பேசினர். அப்போது முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக, விஜயகாந்த் மீது ஊட்டியில் உள்ள மாவட்ட கோர்ட்டில் அதிமுக வக்கீல் ஆனந்தகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் ஆஜராக விஜயகாந்துக்கு கோர்ட் சம்மன் அனுப்பியது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. காலை 11.40 மணிக்கு கோர்ட்டில் விஜயகாந்த் ஆஜரானார். நீதிபதி பிரேம்குமார் முன்னிலையில் இரு தரப்பு வக்கீல்களும் ஆஜராகி வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்தனர். இதையடுத்து, விசாரணையை ஜனவரி 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி தெரிவித்தார். விஜயகாந்துடன் ஐகோர்ட் வக்கீல்கள் பாலாஜி, பன்னீர்செல்வம், நமோநாராயணன் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் அதிகமான வக்கீல்கள் மற்றும் எம்எல்ஏக்கள் சந்திரகுமார், தினகரன், வெங்கடேசன், சம்பத்குமார், பாபுமுருகவேல், பார்த்தசாரதி ஆகியோர் வந்திருந்தனர்.
தமிழ்நாடு..

0 comments :
Post a Comment