சச்சினின் மனைவியின் திடீர் வருகையால் பரபரப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சச்சின் சமீபகாலமாக மோசமாக ஆடிவருவருவதால் அவர் ஓய்வுபெற வேண்டும் என்ற விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. 

குறிப்பாக இங்கிலாந்து, அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இருந்து தற்போது சொந்த மண்ணில் நடந்துவரும் டெஸ்ட் தொடரிலும் சொதப்பி வருகிறார் சச்சின். 

இங்கிலாந்துக்கு எதிராக தற்போது நடந்து வரும் டெஸ்டில் சச்சின் 7 இன்னிங்சில் 112 ஒட்டங்களை மட்டுமே எடுத்துள்ளார். 

தொடர்ச்சியாக மோசமாக ஆடிவருவதால் நாக்பூர் டெஸ்டுடன் சச்சின் ஓய்வுபெற வேண்டுமென முன்னாள் வீரர்கள் பலரும் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளனர். 

இதற்கிடையே சச்சின் கடந்த 28-ந் திகதி தனது எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கை குறித்து பிசிசிஐ நிர்வாகிகளுடன் சந்தித்து பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில் போட்டி நடைபெறும் நாக்பூருக்கு சச்சினின் மனைவி அஞ்சலி நேற்று திடீரென வருகை தந்துள்ளார். இதனால் சச்சின் ஓய்வு முடிவை அறிவிக்ககூடும் என பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

வழக்கமாக அஞ்சலி கிரிக்கெட் போட்டிகளை மைதானத்திற்கு நேரில் சென்று பார்ப்பது கிடையாது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சச்சின் 50வது சதத்தை அடித்தபோது கூட அதனை நேரில் காண அஞ்சலி செல்லவில்லை. தற்போது அவர் சென்றுள்ளதால் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பு அதிகரித்துள்ளது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :