நத்தார் கொண்டாட்டம் நினைவூட்டும் பகிர்தல் உணர்வை கொண்டு வரும் அன்பு, புரிந்துணர்வு பற்றிய போதனையானது எமது நாட்டில் கட்டியெழுப்பப்பட்டு வரும் சமாதானம். சகிப்புத் தன்மை மற்றும் நல்லிணக்கத்தினை மேலும் பலப்படுத்தும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சமாதானத்தின் இளவரசராக இப்பூவுலகிற்கு வந்த யேசுவின் பிறப்பைக் கொண்டாடுவதில் இலங்கை வாழ் கிறிஸ்தவ மக்கள் உலகெங்கிலும் வாழும் தங்களது சகோதர கிறிஸ்தவ மக்களுடன் இணைந்து கொள்கின்றனர்.
கிறிஸ்தவ சமயத்தின் போதனைகளின் சாரமான எல்லோருக்கு அன்பு என்ற செய்தியை இவ்வுலகிற்கு கொண்டு வந்த இயேசுவின் பிறப்பைக் கொண்டாடும் இந்த மகத்தான நாளில் குடும்பங்கள், சமூகங்கள் ஒன்று சேர்ந்து அன்பு, பகிர்வு என்ற நத்தார் தினச் செய்தியை தங்களுக்கிடையே பகிர்ந்து கொள்கின்றனர்.
நத்தார் கொண்டாட்டம் நினைவூட்டும் பகிர்தல் உணர்வைக் கொண்டு வரும். அன்பு, பகிர்தல் உணர்வைக் கொண்டு வரும். அன்பு, புரிந்துணர்வு பற்றிய போதனையானது எமது நாட்டில் கட்டியெழுப்பப்பட்டு வரும் சமாதானம், சகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தினை மேலும் பலப்படுத்த உதவும்.
இந்நன்னாளில் நத்தார் மணி எழுப்பும் நாத ஓசை சமாதானம் மகிழ்சி நல்லெண்ணம் என்ற செய்தியை எல்லோருக்கும் கொண்டு வருகின்றது.
உங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த நத்தார் வாழ்த்துக்கள்.
0 comments :
Post a Comment