Share on
| கல்லூரிக்கு ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட் அணிந்து வரும் மாணவிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என அரியானா மாநிலம் பிவானியில் உள்ள ஆதர்ஷ் பெண்கள் கல்லூரி புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. |
| இவ்விதிகளை மீறும் மாணவிகளுக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்படும் எனவும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் பெண்கள் அணிவதற்கு ஏற்ற அடைகள் குறித்தும் கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ளதையடுத்து கல்லூரி நிர்வாகத்தின் இந்த கட்டுப்பாட்டிற்கு மாணவிகளும், ஆசிரியர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த புதிய கட்டுப்பாடு குறித்து கல்லூரி முதல்வர் அல்கா சர்மா கூறியதாவது: கடந்த 1970ம் ஆண்டு கல்லூரி தொடங்கப்பட்டது முதல் பெண்கள் அணிவதற்கான உடைகள் குறித்து வரையறை விதிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை மீறும் மாணவிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டும், மாணவிகள் மட்டுமின்றி ஆசிரியர்கள் உடை அணிவதற்கும் வரையறை கல்லூரி நிர்வாகத்தினரால் விதிக்கப்பட்டுள்ளது. மாணவிகள் திங்கள்கிழமைதோறும் வெள்ளை நிற சல்வார் கம்மீஸ்களே அணிய வேண்டும், மற்ற தினங்களில் பிற நிறங்களில் சல்வார் கம்மீஸ் அணிந்து கொள்ளலாம். ஆசிரியைகள் புடவைகளிலும், ஆசிரியர்கள் சாதாரண பேண்ட் மற்றும் ஷர்ட்கள் அணிந்து வர வேண்டும். காலமாற்றம் காரணமாக மாணவிகள் ஜீன்ஸ் உடன் நீண்ட குர்தா வகை ஆடை அணிய அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் மாணவிகளோ ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட் அணிந்து வருகின்றனர். அவற்றை தவிர்க்கவே இந்த புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். ஏன் இந்த கட்டுப்பாடு: மாணவிகள் உடை அணிவதற்கான புதிய கட்டுப்பாட்டை விதித்ததற்கான காரணம் குறித்தும் கல்லூரி முதல்வர் அல்கா சர்மா கூறியதாவது: இந்த கட்டுப்பாட்டை விதித்ததற்கு முக்கிய காரணம் கல்லூரியின் நல்லொழுக்கத்தை பாதுகாப்பதற்காக தான், மாணவிகள் உடை அணியும் முறையை பார்த்து அவர்களின் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளும் அதையே செய்கின்றனர். எனவே இதனை தவிர்க்க வேண்டும் புதிய கட்டுப்பாடுகளின் படி அனைவரும் ஒரே மாதிரி உடை அணிவதால் தாழ்வு மனப்பான்மை மற்றும் உயர்வு மனப்பான்மை தவிர்க்கப்படுகிறது. இவற்றை கருத்தில் கொண்டே அனைத்து மாணவர்களும் இந்திய உடைகளில் மட்டும் வர வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியைப்படித்த நீங்கள் அப்படியே கீழே பேஸ்புக் இல் இருக்கும் லைக் என்னும் சொல்லை கிளிக் பன்ணி உற்சாகப்படுத்துங்கள் நன்றி. |

0 comments :
Post a Comment