Share on


| குஜராத் சட்டமன்ற தேர்தல் வருகிற 13 மற்றும் 17ம் திகதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. |
| குஜராத்தில் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா சார்பில் மீண்டும் நரேந்திர மோடியே நிற்கிறார். இந்நிலையில் இந்த தேர்தலில் நரேந்திர மோடிக்கு நடிகை ஐஸ்வர்யாராய் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து உள்ளார். பொதுமக்கள் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஐஸ்வர்யாராய் மாமனார் அமிதாப்பச்சன், முதல்வர் நரேந்திரமோடிக்கு நெருக்கமாக உள்ளார். குஜராத் அரசின் சுற்றுலாத்துறையில் விளம்பர தூதுவராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே குஜராத் தேர்தலில் மக்கள் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்று ஐஸ்வர்யாராய் கூறியிருப்பது பாரதீய ஜனதாவுக்கு அவர் மறைமுகமாக ஆதரவு அளிப்பதை வெளிப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் நடிகை ஐஸ்வர்யாராய் கூறியதாவது: வாக்களிப்பது என்பது நமது உரிமை மட்டுமல்ல, ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள ஜனநாயக கடமை ஆகும். வாக்காளர்களாகிய நாம் தேசத்தின் குரலாக இருக்கிறோம். தேசத்தை முன்னோக்கி நகர்த்தி செல்வதும் நாம்தான் என கூறினார். |
0 comments :
Post a Comment