அடுப்போ, நெருப்போ இன்றி 2 நிமிடத்தில் முட்டை அவிக்கலாம்!!

Share on


நெருப்பு இல்லாமல், ரசாயனங்களின் உதவியுடன் முட்டையை இரண்டே நிமிடத்தில் வேகவைக்கும் பேப்பர் கூடு கருவியை ரஷ்ய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ஈஸியாக முட்டை வேக வைக்கும் வழிமுறை குறித்து எவ்கனி மார்கலேவ் தலைமையில் ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் தீவிர ஆராய்ச்சி செய்தனர். பொதுவாக, காகித கூழால் தயாரான கூடுகளில்தான் முட்டைகள் வைக்கப்படும். அதுபோன்ற பேப்பர் கூட்டைக் கொண்டு இந்த கருவியை உருவாக்கியுள்ளனர். இதற்குள் மொத்தம் 3 லேயர்கள். ஒன்றில் கால்சியம் ஹைட்ராக்சைடு உள்ளிட்ட ரசாயன கலவை. இன்னொரு லேயரில் மெல்லிய படலமாக தண்ணீர். இரண்டையும் பிரிக்கிற வகையில் ஒரு கார்ட்போர்டு லேயர். 

இந்த கருவிக்கு ‘கோகோல் மோகோல்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ரஷ்யாவில் முட்டையை வைத்து தயாரிக்கப்படும் ஒரு உணவு ஐட்டத்தின் பெயர். பேப்பர் கப் போல இருக்கும் கோகோல் மோகோல் கருவிக்குள் முட்டையை வைத்து மூடிவிட்டு, வெளியே நூல் போல தொங்கும் இழையை இழுத்தால், உள்ளே இருக்கும் கார்ட்போர்டு லேயர் நகரும். தனித்தனி லேயரில் இருக்கும் ரசாயனத்துடன் தண்ணீர் சேர்ந்து சூடாகும். இரண்டே நிமிடம்தான்.. முட்டை வெந்துவிடும். அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் டீ, காபி, சாஸ், சுண்டல் வகை உணவுகளை சூடாக்கி சாப்பிடும் வகையில் டின்களில் இந்த தொழில்நுட்பம் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளது. 

உலோக டின்னை சூடாக்கும் தொழில்நுட்பத்தை முட்டை வேகவைக்க பயன்படுத்துவது புதிய முயற்சி என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். முக்கியமான விஷயம்.. ‘கோகோல் மோகோல்’ பேப்பர் கூடு யூஸ் அண்ட் த்ரோ ரகம். ஒரு முட்டையை வேகவைப்பதோடு ரசாயனம் காலியாகிவிடும். அடுத்த முட்டைக்கு அடுத்த கூட்டைத்தான் எடுக்க வேண்டும். சிறந்த கையடக்க கருவிக்கான டிசைனிங் விருதை ஐரோப்பிய பேக்கேஜிங் டிசைன் சங்கத்திடம் இருந்து பெற்றிருக்கிறது ‘கோகோல் மோகோல்’. இதை வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்து விற்க கம்பெனிகள் எதுவும் இதுவரை ரஷ்ய விஞ்ஞானிகளை அணுகவில்லை என்பதால் விலையும் நிர்ணயிக்கப்படவில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :