பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் ரகசிய விசாரணைகள் ஊடகங்களில் வெளியிட தடை:பிரியதர்ஷன யாப்பா,

Share on

பிரதம நீதியரசர் மீதான அரசியல் குற்றப்பிரேரணையை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழு விசாரணை தொடர்பான விடயங்களை வெளியிட ஊடகங்களுக்கு அனுமதி அளிப்பதா மறுப்பதா என்பது குறித்து பாராளுமன்றில் இன்று (06) விவாதம் இடம்பெற்றது. 


பாராளுமன்றில் இன்று சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை எழுப்பிய பாராளுமன்றத் தெரிவுக்குழுத் தலைவர், அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் ரகசிய விசாரணைகள் ஊடகங்களில் வெளியிடப்படுவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். 



அப்படி தடுக்காவிடின் விசாரணையின் இரகசியத்தன்மை பேணப்படாதென அவர் சுட்டிக்காட்டினார். 



இதன்போது சபையில் எழுந்து கருத்து வெளியிட்ட எதிர்கட்சி பிரதம கொரடா, பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க, பாராளுமன்றத் தெரிவுக்குழு விசாரணையில் ஆரம்பம் தொட்டு முடிவுவரை நடக்கும் அனைத்தையும் இணையத்தளங்கள் ஒன்றுவிடாது கசியவிடுவதாகக் குறிப்பிட்டார். 



இதனை கட்டுப்படுத்த வேண்டும். அல்லது விசாரணைகளுக்கு அனைத்து ஊடகங்களுக்கும் பகிரங்க அழைப்பு விடுத்து விசாரணைகளில் இடம்பெறும் விடயங்களை உலகிற்கு அறியச் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். 



இதேவேளை, அப்படி செய்வதன் மூலம் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படுவதோடு பிரதம நீதியரசர் தொடர்பான உண்மை நிலையும் வெளியாகும் என சபையில் கருத்து வெளியிட்ட ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல குறிப்பிட்டார். 



எனினும் அதற்கு மறுப்புத் தெரிவித்து கருத்து வெளியிட்ட அமைச்சர் விமல் வீரவன்ச, பாராளுமன்றத் தெரிவுக்குழு விசாரணைகள் பிரதம நீதியரசருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தாதவாறு இரகசியமாக இடம்பெற வேண்டும் என குறிப்பிட்டார். 



விசாரணைகளின் பின்னர் தகவல் வெளியிடுவதே நீதியரசருக்கு சிறந்தது என அவர் தெரிவித்தார். எனவே பாராளுமன்றத் தெரிவுக்குழு விசாரணை தகவல்கள் ஊடகங்களில் வெளியிடப்படுகின்றமை தடுக்கப்பட வேண்டும் என விமல் வீரவன்ச கேட்டுக் கொண்டார். 



அப்படியானால் பிரதம நீதியரசருக்கு எதிராக நீதிமன்ற வளாகத்திலும் பாராளுமன்ற வளாகத்திலும் பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்யப்படுகின்றமை சரியா என பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க சபையில் கேள்வி எழுப்பினார். 



இங்கு கருத்து வெளியிட்ட ஐதேக பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பாராளுமன்றத் தெரிவுக்குழு விசாரணையை காண ஊடகங்களுக்கு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட வேண்டும் எனவும் அதுவே சிறந்தது எனவும் குறிப்பிட்டார். 



இக்கருத்துகளை செவிமெடுத்த பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி, இவ்விடயத்தை சபாநாயகர் கவனத்திற்கு கொண்டுசென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :