Share on
ஜனாஸா தற்போது நல்லடக்கத்திற்காக மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
மாரடைப்பு காரணமாக இன்று காலை மரணமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான மொஹமட் மஹ்ரூபின் ஜனாஸாவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பார்வையிட்டார்.
இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, ஏ.எச்.எம்.பௌசி, சுசில் பிரேம்ஜயந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான சஜித் பிரேதமதாச, திஸ்ஸ அதநாயக்க, கரு ஜயசூரிய, டிரான் அலஸ், ஏ.எச்.எம்.அஸ்வர், கொழும்பு மாநகர மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில், முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி, மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உட்பட பல அரசியல் பிரமுகர்களும் முக்கியஸ்தர்களும் மொஹமட் மஹ்ரூபின் இல்லத்திற்கு விஜயம் செய்து ஜனாஸாவை பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment