அட்டாளைச்சேனை கோணாவத்தை அல்-ஹுதா பாலர் பாடசாலை மற்றும் ஆங்கிலக் கல்வி நிறுவகத்தின் ஏற்பாட்டில் மாணவர்களின் விடுகை விழா அமைப்பின் முகாமையாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் தலைமையில் கடந்த சனிக்கிழமை அட்டாளைச்சேனை கல்வியற் கல்லூரி கேட்போர் மண்டபத்தில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை பிரதம அதிதியாகவும்இ முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளரும்இ தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.எம்.நஸீர் கௌரவ அதிதியாகவும்இ அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ்இ அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.எம்.முஹம்மது அமீன்இ அல்-ஜெஸீறா வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம்.றியாஸ் ஆகியோர்கள் அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் மாணவர்களின் பல்வேறுபட்ட கலை கலாசார நிகழ்வுகள் நடைபெற்றன. பங்குபற்றிய மாணவர்கள் அனைவருக்கும் வருகை தந்த அதிதிகளினால் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் அல்-ஹுதா பாலர் பாடசாலையின் நிருவாகத்தினர்இ கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் முக்கியஸ்தர்கள்இ பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment