கல்முனை அபிவிருத்தி மற்றும் கடந்த கால அபிவிருத்தி முன்னெடுப்புகள் பற்றி ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் நேற்று அவரது கல்முனைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
தயட கிருல தேசிய அபிவிருத்தி திட்டத்தினூடாக கல்முனை நகர் அழகுபடுத்தல், வடிகான்கள் அபிவிருத்தி மற்றும் கல்வி, சுகாதாரம், மீன்பிடி, விவசாயம், போக்குவரத்து போன்ற துறைகளை அபிவிருத்தி செய்வதற்கு தான் திட்டமிட்டுள்ளாக தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, மருதமுனை, நற்பிட்டிமுனை ஆகிய ஊர்களில் காணப்படும் குறைபாடுகள் பற்றி ஊடகவியலாளர்களிடமும் இதன் போது கேற்றறிந்து கொண்டார்.


0 comments :
Post a Comment