Share on
கிழக்கு மாகாணசபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்களைப் பார்த்து, 'நீங்கள் மூளையில்லாமல் இருப்பது குறித்து நான் கவலையடைகிறேன்' என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் தயா கமகே மாணசபை அமர்வின்போது தெரிவித்ததையடுத்து அங்கு பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கிழக்கு மாகாணசபையின் 2013ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் கால்நடை உற்பத்தி, சிறு கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் குழுநிலை விவாதம்இடம்பெற்றுக் கொண்டிருந்தபோதே ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் தயா கமகே இவ்வாறு கூறினார்.
இதனையடுத்து ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் தயா கமகேயுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, 'மூளை இல்லை' என்று கூறியதை அவர் வாபஸ் பெற வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதனையடுத்து, ஆளுந்தரப்பு உறுப்பினர்களுக்கு மூளை இருக்கிறது என்று தயாகமகே கூறினார்.
கிழக்கு மாகாணசபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்களைப் பார்த்து, 'நீங்கள் மூளையில்லாமல் இருப்பது குறித்து நான் கவலையடைகிறேன்' என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் தயா கமகே மாணசபை அமர்வின்போது தெரிவித்ததையடுத்து அங்கு பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. கிழக்கு மாகாணசபையின் 2013ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் கால்நடை உற்பத்தி, சிறு கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் குழுநிலை விவாதம்இடம்பெற்றுக் கொண்டிருந்தபோதே ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் தயா கமகே இவ்வாறு கூறினார்.
இதனையடுத்து ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் தயா கமகேயுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, 'மூளை இல்லை' என்று கூறியதை அவர் வாபஸ் பெற வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதனையடுத்து, ஆளுந்தரப்பு உறுப்பினர்களுக்கு மூளை இருக்கிறது என்று தயாகமகே கூறினார்.
0 comments :
Post a Comment