நவீன சொப்பிங் கொம்லக்ஸ் கல்முனையில் அமைக்க ஆசிய மன்றம் உதவி!

Share on

(நமது செய்தியாளர்)
கல்முனையில் நவீன பல்வியாபார கட்டிடத் தொகுதி (சொப்பிங் கொம்லக்ஸ்) அமைப்பது தொடர்பாக ஆசிய மன்றத்தின் கொரிய நாட்டு ஆராய்ச்சியாளரான திருமதி கியோங்ஹவா ஹாவுடன் நேற்று முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கலந்துரையாடினார்.
குறித்த கொரிய நாட்டு குழுவினர் கல்முனையில் நவீன பல்வியாபார கட்டிடத் தொகுதி அமைப்பது தொடர்பான ஆய்வினை மேற்கொண்டு அதற்கான செலவீனங்களையும் மதிப்பீடு செய்து அறிக்கையினை முதல்வரிடம் கையளித்தனர்.
அச்செலவீனத்தில் ஒரு பகுதியினை ஆசிய மன்றம் வழங்குவதற்கும் உடன்பாடு காணப்பட்டது. ஒரு மாதத்திற்கு முன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது குறித்த கட்டிடத் தொகுதியினை அமைத்துத் தருமாறு முதல்வர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே இவ்அறிக்கை சமர்ப்பிக்கப்பட்து குறிப்பிடத்தக்கதாகும்.
ஆசிய மன்றத்தின் கிழக்கு மாகாண நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.வலீதின் நெறிப்படுத்தலில் முதல்வர் செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் தம்மிக, ஆணையாளர் ஜே.லியாகத்அலி, பொறியியலாளர் ஹலீம் ஜௌசி ஆகியோரும் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :