அக்கரைப்பற்று ஹிஜ்ரா பாலர் பாடசாலையின் வருடாந்த விடுகை விழா

என்.சப்னாஸ்-

அக்கரைப்பற்று ஹிஜ்ரா பாலர் பாடசாலையின் 1வது வருடாந்த சின்னங்சிட்டுகளின் விடுகை விழா ஹிஜ்ரா வித்தியாலய மண்டபத்தில் ஞாயிறன்று சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் ஆலோசகரும் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான சாமஸ்ரீ தேசமானி என்.எம்.நஜிமுத்தீன் ஜே.பி தலைமையில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக முன்பள்ளிக் கல்வி பணியகத்தின் அம்பாரை மாவட்ட செயற்பாட்டுப் பணிப்பாளர் ஏ.எல்.இப்றாகீம் ஜே.பி கலந்து சிறப்பித்தார்.
 இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் அல்ஹாஜ் எம்.ஏ.ஏ.வசீர்தீன்  அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் ஏ.ஜி.அஸ்மி அவர்களும்;;; விஷேட அதிதிகளாக ஹிஜ்ரா வித்தியாலய அதிபர் எம்.எச்.எம்.தாஸீம் அக்கரைப்பற்று-05 கிராம உத்தியோகத்தர் ஏ.ஜே.சாஜித்,  அக்கரைப்பற்று-05 சிவில் பாதுகாப்பு குழு தலைவரும்  ஹிஜ்ரா வித்தியாலய அபிவிருத்தி சங்க செயலாளருமான என்.ரி.நாசீக் ஆகியோர்கள் கலந்து சிறப்பித்துள்ளதுடன் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. சிறுவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன. 








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :