ரிஸானா நபீக் விவகாரம்: சவூதி வெளிவிவகார அமைச்சருக்கு பீரிஸ் கடிதம்

சவூதி அரேபியாவில் மரண தண்டனைவிதிக்கப்பட்டுள்ள மூதூரைச் சேர்ந்த யுவதி ரிஸானா நபீக்கிற்கு மன்னிப்பளிப்பது குறித்து கரிசனை கொள்ளுமாறு கோரி சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சருக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார். ரிஸானா நபீக் விவகாரத்திற்கு உறுதியானதொரு தீர்வை எட்ட முடியாதிருக்கின்ற நிலையில் மரண தண்டனையிலிருந்து அவரை விடுவிப்பதற்கான சகல விதமான முயற்சிகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ரிஸானாவுக்கு மன்னிப்பளிக்குமாறு கோரி ஏற்கனவே சவூதி அரேபிய மன்னருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ள நிலையிலேயே தற்போது வெளிவிவகார அமைச்சரும் மீண்டும் ஒரு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :