பிரதமர் பதவிக்கு மோடி தகுதியானவர்: சுஷ்மா ஸ்வராஜ் தெரிவிப்பு

Share on

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி,பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் என்று பா.ஜனதா மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்ய சுஷ்மா, நேற்று வதோதராவுக்கு வந்தார். 

அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"குஜராத்தில் மோடி சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். நாட்டின் பிரதமராக வருவதற்கான திறமை மோடியிடம் உள்ளது.அவர் அதற்குத் தகுதியானவர்.குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றாவது முறை வெற்றி பெற்று பா.ஜனதா ஹாட்ரிக் சாதனை படைக்கும். 2014ஆம் ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோற்கடிக்கப்படும்" என்றார். 

பின்னர், வதோதராவில் பா.ஜனதா சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சுஷ்மா பேசினார். அவருடன் கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, பீகார் துணை முதல்வர் சுஷீல்குமார் மோடி ஆகியோரும் பங்கேற்றனர். 

2014
மக்களவைத் தேர்தில் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் குறித்து பாரதிய ஜனதா இதுவரை அதிகாரப்பூர்வாக எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்க கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் தலைவரும்,பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கட்சியின் மூத்த தலைவர் என்ற அடிப்படையில் அத்வானியை முன்னிறுத்த வேண்டும் என்ற கருத்தும் பா.ஜனதாவில் நிலவுகிறது.

இந்நிலையில், மோடிக்கு ஆதரவாக சுஷ்மா வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :